Tuesday, February 28, 2012

யாழ் சோனவனின் புத்தி !!!!!

யாழவன் :யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியானின் முயற்சியால் யாழ் சோனக தெருவின் பல வீதிகள் காபர்ட் போடப்பட்டு , வீதிகளுக்கு பிரகாசமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மௌலவி சுபியானின் பல மாதங்களாக மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டுவருகிறது அதேவேளை இதை குழப்பவும் சில யாழ் மாநகர சபை உறுப்பினர் செயல்படுவதாகவும் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார் .

Sunday, February 26, 2012

யாழ் சோனகதெருவை நாசம் செய்த துரோகிகள் யார்?

ஒரு தமிழ் சினிமா.சிடிசன்  என்று ஞாபகம். “அத்திப்பட்டி” என்ற கிராமமே சில நயவஞ்சக சமூக விரோதிகளால் அடியோடு அழிக்கப்படுகிறது. அதில் தப்பிய நாயகன் இவர்களை பிடித்து சட்டத்தின் முன்பு ஒப்படைத்து நீதிபதி அனுமதியுடன் இவர்களிற்கான தண்டைனையையும் கூறுகிறான். அந்த தண்டனை இது தான். “நம் சமூகத்தை அழித்த இவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளக் கூடாது. பெண்கொடுத்தல், பெண் எடுத்தல், மரணத்தில் கலந்து கொள்ளல், வர்த்தகம் செய்தல் என அனைத்து விதமான சமூக தொடர்புகளையும் அறுத்து இவர்களை தனிமைப்படுத்துவது தான் அந்த தண்டனை”.

மீளமைக்கப்பட்டு வரும் யாழ் சின்னப்பள்ளிவாசல்

முஹம்மத் ஜான்ஸின் 
யாழ்ப்பாணம் சோனகதெருவில் அமைந்திருக்கும் சின்னப்பள்ளிவாசல் தற்போது மீளமைக்கப்பட்டு வருகின்றது.  1890களில் நல்லூரில் வாழ்ந்த இறுதி முஸ்லிம் குடும்பங்கள் சோனகதெருவில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதைப் பார்த்து அங்கு குடியேற விரும்பி குளத்தடி பிரதேசத்திலிருந்த காணிகளை வாங்கி அங்கு குடிசைகளை அமைத்துக் குடியேறினர். தமது தொழுகைக்காக நீண்ட தூரம் நடக்கவேண்டியிருந்ததால் தமது குடியிருப்புகளுக்கு அண்மையிலேயே பள்ளிவாசல் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டது தான் இந்த சின்னப்பள்ளிவாசலாகும்.

Monday, February 13, 2012

யாழ் தமிழர்களிற்கு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பகிரங்க வேண்டுகோள் !!

அன்பார்ந்த யாழ் குடா தமிழ் மக்களே. இது உங்களிற்கான பதிவு. இனவாதம், தமிழ் குறுந்தேசியவாதம், சாதித்துவம், ஆயுத அதிகாரம் போன்ற பேய்களை விட்டு விலகிய நிலையில் இதை கொஞ்சம் வாசியுங்கள்... தமிழ் மக்கள். நல்ல கலாச்சாரங்களிற்கு சொந்தக்காரர்கள். நல்ல கல்விக்கும் சொந்தக்காரர்கள். சிறந்த முயற்சியாளர்கள். கடின உழைப்பாளிகள். இப்படி எவ்வளவோ சொல்லலாம். தடம் புரண்ட போராட்டம் இது எல்லாவற்றையுமே அள்ளி சென்றுவிட்டது. உங்கள் போராட்டம் எம்மை அள்ளி சென்றது போல. அள்ளிச் சென்று புத்தள உப்பளங்களில் துப்பியது போல..

புலம்பெயர் தேசங்களில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களே ! உங்களுடன் ஒரு நிமிடம் சோனக தெரு பேசுகிறது..

யாழ் முஸ்லிம் பேஸ்: நான் சோனக தெருவின் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். மீலாத் விழாவின் கலகலப்புக்கள் அற்ற சோனக தெரு. அங்காங்கே சில குந்துகளில் ஜங்கில் புக் மௌக்லியை நினைவு படுத்தும் கோலங்களில் சிறுவர்கள். அவர்களைப் போலவே இன்னும் சில குந்துகளில் பெரிசுகள். ஒரு சில நாய்கள் (இவை சோனக தெருவில் தமிழர்கள் வாங்கிய வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள். அதாவது அந்த மண்ணிற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை அவற்றிற்கும் உண்டு) அவர்கள் பேசும் அரசியலை ஆவலோடு அன்னாந்து பார்க்கின்றன..

Wednesday, February 8, 2012

யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் 2012- படங்கள்

30 படங்கள் உங்களுக்காக: இஸ்லாத்தின் பார்வையில் தவறான களியாட்டங்கள் இடம்பெறவில்லை ஆனாலும் சில சகிக்க முடியாத சம்பவங்களும் இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் என்று கருதும் சில சம்பவங்களும் இடம்பெற்றது மொத்தமாக பார்க்கும் போதும் தேவையான ஒன்றாகவே தெரிகிறது , யாழ்பாணம் நிகழ்சிகளுக்கு வராதவர்களும் கூட வர தவறி விட்டோமே என்று யோசிக்கவைத்துள்ளது எல்லோர் கண்களிலும் “பழைய சோனக தெருவை” காணும் அவா. இருந்தது ஆனால் சில விடயங்கள் தவிர்க்க பட்டிருந்தால் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக அனைவரின் வரவேற்பையும் பெற்றிருக்கும் யாழ் முஸ்லிம்கள்.

யாழ் சோனகதெரு 2012 - உணர்வுகளின் கண்காட்சி

   “வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி காண்பதில்லை.
(சந்திரபாபுவின் பாடல் வரிகள்)
அபூ மஸ்லமா: யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு இனிதே நிறைவு பெற்ற பின்பு நாம் யாழ்ப்பாண முஸ்லிம்களிற்கு சில விடயங்களை ஞாபகபடுத்த விரும்புகிறோம்.... எம் அன்பிற்குரிய சகோதரர்களே, சகோதரிகளே...... நாம் முஸ்லிம்களின் ஒன்று கூடலை எதிர்க்கும் மறைநிலை சிந்தனையாளர்கள் (நெகடீவ் திங்கர்ஸ்) அல்ல.

யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல்

யாழ்பாடி யூஸுப்: இடம்பெயர்ந்து பல்வேறு ஊர்களிலும் நாடுகளிலும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான ஒன்று யாழ்ப்பாணம் சோனகரிஸ்தானில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியை சிறுசிறு தலையங்கங்கள் மூலமாக விரிவாக விளக்கலாம் என்று கருதி அவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.

யாழ் முஸ்லிம் - சென்நீக்கிலஸ் சமர்க்களத்தில்

முஹம்மத் ஜான்சின்: கடந்த 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை யாழ்;ப்பாணத்தில் இடம்பெற்ற ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயாந்த ஏராளமான முஸ்லிம்கள் வருகை தந்திருந்தார்கள். இந்த ஒன்று கூடல் நிகழ்வுகளில் ஒன்றாக உதைப்பந்தாட்டப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விளையாடிய யாழ் முஸ்லிம் உதைப்பந்தாட்ட அணி அந்த ஆண்டில் மட்டும் பல்வேறு வெற்றிக் கிண்ணங்களை யாழ்ப்பாணத்தில் சுவிகரித்திருந்தது. யாழ் உதைப்பந்தாட்ட லீக் கிண்ணம், லீக் தலைவர் கிண்ணம், யாழ் மாவட்ட சம்பியன் கிண்ணம்,

Tuesday, February 7, 2012

“அடி ராக்கம்மா கையதட்டு” - மாபெரும் யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல்

அபூ மஸ்லமா: இஸ்லாத்தின் பார்வையில் களியாட்டங்கள் பற்றி நாம் எவ்வளவோ எடுத்து சொன்னோம். யாருக்கும் புரியவில்லை. அல்லது புரிந்த போதும் கூட தங்கள் உள்ளத்தை கட்டுப்படுத்த முடியாத அவா. எல்லோர் கண்களிலும் “பழைய சோனக தெருவை” காணும் அவா. கனா காணும் கண்களிற்கு சொந்தக்காரர்கள் யாழ் முஸ்லிம்கள். 20 வருடம் அடக்கி வைத்த ஆசைகளை இரண்டு நாட்களில் அடைய துடிக்கும் அவர்கள் வேகம் எமக்கு புரியாமலில்லை.

Thursday, February 2, 2012

ஏன் இந்த இரட்டை வேடம்? ஏன் இந்த நயவஞ்சகத்தனம்?

குறித்த திகதியின் BBC தமிழோசையை இணையத்தின் மூலம் கேட்க முடியும். செய்தியறிக்கையில் இடம் பெற்ற ஒரு செய்தியில் பாவிக்கப் பட்ட வார்த்தைகள் தொடர்பில் நான் BBC தமிழோசைக்கு அனுப்பி வைத்துள்ள எதிர்ப்பு கீழே இணைக்கப் பட்டுள்ளது. மேற்படி விடயம் குறித்து உங்கள் தளங்களில் செய்திகளை வெளியிடும்படியும், எதிர்ப்பை வெளியிடும் படியும் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

வலைத்தள தெருக் கோழி சண்டை வேண்டாம்

''சின்னபள்ளிவாயல் நிகழ்வுகளும் - ஜான்ஸின் எனும் மனிதனின் குழப்பங்களும்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஒரு யாழ்ப்பாண முஸ்லிம் வலைத்தளம் பதிவு செய்திருந்தது , அதேபோன்று அதற்கு எதிராகவும் , புதிராகவும் எமது யாழ்ப்பாண முஸ்லிம் நபர்கள் சிலரினால் நடத்தப்படும் வலைதலங்களில் செய்திகள் நாற்றம் எடுக்கும் அளவுக்கு வெளியாகின்றன அவை மிகவும் கவலையான விடயம் அதற்கு லண்டனில் வாழும் ஒரு யாழவன் -அலி ரிஷான்- தனது ''முகப்பு நூலில்'' Face book இந்த தெருச் சண்டை தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார் அந்த கருத்துக்கள் மிகவும் சிறந்த கருத்துக்களாக எமக்கு பட்டதால் யாழ் முஸ்லிம் மண் அந்த அவரின் கருத்தை இங்கு தருகிறது வாசித்த பின்னர் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் .

யாழ் முஸ்லிம் மண்ணை காப்பாற்றுங்கள் - முஸ்லிம் புலம்பெயர் உறவுகளிற்கு ஒரு வேண்டுதல்!

 ABU Maslama
பலஸ்தீனில் அன்று யூதர்களிற்கு காணிகளையும், விவசாய நிலங்களையும் விற்பதனால் ஏற்படும் தீங்குகளை உணர்ந்த உலமாக்கல் லெபனானின் பெய்ரூட்டில் ஒன்று கூடி ஒரு பத்வா வெளியிட்டனர். “இன்றிலிருந்து பலஸ்தீன மண்ணை விற்பது ஹராம்” என்பதே அந்த பத்வா. தமிழர்கள் சாதிக்காக போராடினார்கள். விடுதலைக்காக போராடினார்கள். இரண்டுமே கிடைத்தபாடில்லை. இயக்கங்கள் விடுதலைக்காக போராடின. தலைமைத்துவத்திற்காக போராடின. இரண்டுமே கிடைக்கவில்லை. இப்போது தங்களை தக்க வைத்துகொள்வதற்காக போராட வேண்டிய நிலமை. போராடியதன் விளைவு படலைக்குள் இராணுவம் வந்து நிற்கும் நிலை.