Tuesday, February 7, 2012

“அடி ராக்கம்மா கையதட்டு” - மாபெரும் யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல்

அபூ மஸ்லமா: இஸ்லாத்தின் பார்வையில் களியாட்டங்கள் பற்றி நாம் எவ்வளவோ எடுத்து சொன்னோம். யாருக்கும் புரியவில்லை. அல்லது புரிந்த போதும் கூட தங்கள் உள்ளத்தை கட்டுப்படுத்த முடியாத அவா. எல்லோர் கண்களிலும் “பழைய சோனக தெருவை” காணும் அவா. கனா காணும் கண்களிற்கு சொந்தக்காரர்கள் யாழ் முஸ்லிம்கள். 20 வருடம் அடக்கி வைத்த ஆசைகளை இரண்டு நாட்களில் அடைய துடிக்கும் அவர்கள் வேகம் எமக்கு புரியாமலில்லை.

மீலாதுன் நபி பற்றி குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஆதாரபூர்வமாக விளக்கியும் கூட விலகி நிற்கும் சமூகம் நாம் என இன்னொரு முறை நிரூபித்துள்ளார்கள் யாழ்ப்பாண முஸ்லி்ம்கள். சரி மறுமையில் அதற்கான விடைகளை நாம் எல்லோரும் கண்டுகொள்ளத்தான் போகிறோம். இப்போது சில உலகியல் சடவாத காரணிகளின் நோக்கில் யாழ்ப்பாண மீலாதுன் நபி விழா பற்றி சற்று அலசுவோம்.

சிங்களவனிற்கு “வெசாக்”. சாரி சாரியாக மக்கள் கூட்டம். கியூவில் நின்று தன்சல் தின்னாவிட்டால் அவர்கள் ஆத்மா சாந்தியடையாது.

தமிழனிற்கு “நல்லுர் கந்தசாமி கோவில் திருவிழா”. சுண்டலையும் தேங்காய் சொட்டையும் அவலையும் முண்டியடித்து, அள்ளி தின்று, மென்று விழுங்கும் மக்கள் கூட்டமது.

கிறிஸ்தனிற்கும் “மாதாவின் சொரூப திருப்பவனி” கட்டை கவுன்களில் அலை மோதும் மக்கள் கூட்டம். பீஸ்ட் என்றும் மார்ச் என்றும் ஸ்லோமோஷனில் அலைவார்கள்.

சோனவனிற்கு? ஏதாவது செய்தாக வேண்டாமா?. இருக்கவே இருக்கிறது மீலாதுன் நபி. நபியின் பிறந்த தினம். நபி இறந்த தினமும் அதே தினம்தானே எனும் லொஜிக் ஏன் புரியவில்லை நமக்கு?. சரி போகட்டும். இந்த மீலாதுன் நபி அமோகமாக அரசியல் மயப்படுத்தப்பட்டது சந்திரிக்கா குமார ரணதுங்காவின் ஆட்சிப்பொழுதுகளிலேயே. அமோக மயப்படுத்தியவர் அலவி மௌலானா. இதை சொல்லும் போது, நாங்கள் 20 வருடங்களிற்கு முன்பே காலம்காலமாக மீலாதுன் நபி கொண்டாட்டங்களை சிறப்பாக நடாத்துகின்றோம் தானே எனும் உங்கள் வாதத்தின் ஒலி எம் காதுகளை வந்து உடனடியாகவே அடையத்தான் செய்கிறது.

மீலாதுன் நபியின் பெயரால் யாழ்ப்பாணத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம். வர்ணஜால ஒளிவிளக்குகளால் சோனக தெருவை அலங்கரிந்து, லவ்ஸ்ட் ஸ்பீகர்களில் நாகூர் கனிபாவினதும் காயல் ஷேக் முஹம்மதினதும் இஸ்லாமிய பாடல்களை இசைத்து (நல்ல வேளை செயின் பிகாவும், யூசுப் இஸ்லாமும் தப்பி விட்டார்கள்) பலவிதமான போட்டிகளை நாடாத்தி, யாழ்ப்பாண சோனக தெருவின் பாரம்பரிய பொட்டிச்சோறு கொடுத்து உல்லாசமாக கொண்டாடுகிறோம். இது தான் நாம் நபியின் பெயரால் நபியை நினைவு கூறும் முறை.

இங்கேயும் ஒரு அரசியல் ஒளிந்துள்ளது. அது சோனக அரசியல். யாழ்ப்பாண முஸ்லிம்களை அதே பழைய சோனக தெரு கனவுகளில் மிதக்க வைக்கும் முதலாளித்துவ அரசியல். இவர்களின் இந்த மெஸ்மரிஸத்தில் மயங்கிய சோனவர்கள் 2013 மீலாத் விழாவை இதை விடவும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கும் ஏமாற்று அரசியல். சோனக தெருவின் பவரை சூழ உள்ளவர்களிற்கு காட்டும் அரசியல். யாழ் முஸ்லிம் சமூகத்தை தங்கள் ஒட்டுமொத்த குத்தகைக்குள் 2013 வரை எடுத்து தங்கள் தலைமைத்துவ இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் சுயநல அரசியல்.

“என்டர்டைன்மன்ட் அன்ட் என்ஜோய்” என்று ஆங்கிலத்தில் சொல்லும் உல்லாச பொழுது போக்கு மையம் யாழ்ப்பாண சோனக தெரு. நம் லோக்கல் பாஷையில் சொன்னால் fun எடுக்கவும் ஆஷிக் எடுக்கவுமே யாழ்ப்பாணம் செல்கிறோம் நாம். களைத்துப்போன உள்ளத்தை ரீபிரஷ் செய்யும் களம் யாழ்ப்பாணம் சோனக தெரு எனும் நிலைக்கு சோனக தெருவை தள்ளியுள்ளன முதளாலித்துவ சக்திகள்.

காஷ்மீரின் ஷிம்லா இருக்கிறது, அழகிய ஸ்பெய்ன் இருக்கிறது, வெனிஸ் இருக்கிறது, சுவிஸின் மலை முகடுகள் இருக்கிறது. இறைவன் தந்த செல்வத்தை அங்கே சென்று அநுபவிக்கலாமே?

கொஞ்சம் த்ரிலிங் தேவையென்றால் அமேசன் காடு இருக்கிறது.  தன்சானியாவின் சபாரி இருக்கிறது. அதுவும் போதாதென்றால் ஆப்கானிஸ்தானின் கந்தகார் இருக்கிறது. அங்கு சென்று வேட்டையாடி விளையாடலாமே!. அது என்ன சோனக தெருவை மையப்படுத்தி உல்லாசம் அநுபவிப்பது? சில வேளை சோனக தெரு லோ கொஸ்ட் பட்ஜட்டாக கூட இருக்கலாம் இவர்களிற்கு.

முஸ்லிம் வட்டாரத்தை தெருரீதியாக பங்கு போட்டு, பள்ளிவாயல்களை தங்களிற்குள் பங்கு போட்டு இப்போது முஸ்லிம்களை கூட்டாக பங்கு போடும் நிலையை எண்ணி வெட்கப்படுகிறோம் நாம். சோமாலியாவிலும், சூடானிலும் ரொட்டித்துண்டிற்காக கையேந்தும் குழந்தைகள் போல் நீங்கள் போடும் ஆட்டிறைச்சி துண்டிற்காக சேவகம் செய்யும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்காதீர்கள் “மக்கள் ஒன்று கூடல்” என்ற பெயரால்.

நாளை தமிழ் கூட்டமைப்பு அழகாக ஒஸ்லோவிலோ அல்லது லண்டனிலோ எழுந்து நின்று மார்பு நிமிர்த்தி சொல்லும் “முஸ்லிம்கள் தாங்கள் தமிழ் பேசம் இனம் என்பதை இதயபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதே போல தமிழர்களும் தங்கள் சகோதர இனமான இஸ்லாமிய தமிழர்களை அன்புடன் அகர்ஷித்துள்ளார்கள். அதற்கு நல்ல ஓர் உதாரணம் யாழ்ப்பாணம் சோனக தெருவில் நடந்த மீலாதுன் நபி விழாவும் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்று கூடலும். 20 வருட இன்னல் களைந்து இன்று முஸ்லிம்கள் செல்வந்த சீமான்களாக மாறி விழா எடுக்கிறார்கள். ஆதலால் முஸ்லிம் தனிதரப்பு, தனியலகு, தனியான அதிகாரங்கள் போன்றவை அவர்களிற்கு தேவையில்லை” என.

நாளைய அரசின் அமைச்சர்கள் கூட, ஏன் அரசாங்கள அதிபர் கூட சொல்லலாம் “யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஏனைய அகதி தமிழர்களுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறந்த வாழ்க்கை தரத்தில் இருக்கிறார்கள் அதற்கு நல்ல உதாரணம் முஸ்லிம் வட்டார கொண்டாட்டங்கள். ஆதலால் நாம் எமது அபிவிருத்திகளை இவர்களையும் விட கீழ் நிலையில் உள்ள இடம்பெயர் தமிழர்களிற்கு முன்னுரிமைப்படுத்துவோம்” என்று.

கூத்தடித்து கும்மாளமிட்ட கூட்டம் பனங்காய்களையும், இராசவள்ளி கிழங்குகளையும் வேன்களிலும் கார்களிலும் நிரப்பிக்கொண்டு சில தினங்களில் சென்று விடும். மீண்டும் சோனக தெரு சோனவன் ரேஷன் கடை வாசலில் அமெரிக்கமாவிற்கும், இந்தியபருப்பிற்கும் கியூவில் நிற்கும் நிகழ்வே தொடரப்போகிறது.

நபி நினைவு கூர்வதற்கு அவரது வரலாற்றை படிக்கலாம். ரகீக் அல் மக்தும் எனும் அற்புதமான தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நபி (ஸல்) அவர்களின் வரலாற்று பதிவை வாங்கி யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்தாலும் இவர்கள் செலவழித்த இரண்டு மில்லியன் ரூபாவில் பாதி அளவு கூட போகாது. நபியின் மனைவியர் பெயர் முழுதாய் தெரியாது. பெருமானார் கண்ட போர்களங்கள் எத்தனை என்றால் தெரியாது. 10 முஹாஜிரின்களை வரிசைபடுத்த முடியாது. 10 அன்சார்களை வரிசைபடுத்த முடியாது.  நபியின் இறுதி ஹஜ் பிரசங்கம் என்னவென்றால் மசூத் ஆலிம்தான் நினைவிற்கு வருவார் பிரசங்கம் நினைவிற்கு வாரது இவர்களிற்கு. ஆனால் மீாதுன் நபி எனும் பெயரில் நபியின் பிறந்த தினத்தை கொண்டாடுவார்கள்.

இந்த கேவலமான மனிதர்களுடன் வாழ்வின் வரலாற்றை பகிர்ந்து கொள்வதில் வெடகப்படுகிறோம். இவர்கள் யார் தெரியுமா? விட்டால் நபியவர்களிற்க்கும் பொட்டி சோறு அனுப்பி வைப்பார்கள் எலையோன் கார்களில்...!

No comments:

Post a Comment