Monday, January 9, 2012

யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாக சபை

தகவல்: எம்.எஸ்.எம்.ஜான்ஸின்: யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான தெரிவுகள் 2012 ஆம் ஆண்டு ஜனவரி 7 சனிக்கிழமை இடம்பெற்றது. நிர்வாகசபைக் கூட்டம் யாழ் சின்னப்பள்ளியில் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றது. கூட்டத்தை சிறந்த முறையில் நடத்த யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள சில நிர்வாக சபை உறுப்பினர்கள் துணிவுடன் முன்வந்து ஒத்துழைப்பு வழங்கினர்.

எம்.எம். முஸாதீக் தற்காலிக தலைவராகக் கொண்டு கூட்டம் ஆரம்பமானது. முதலில் கிராஅத் ஓதப்பட்டது. அதையடுத்து பள்ளிவாசலின் தற்போதைய நிலைமை மற்றும் குறைநிறைகள் ஆராயப்பட்டன. 

தலைவராக கிராம அதிகாரி எம்.எஸ்.ஜினூஸ் தெரிவு செய்யப்பட்டார் ( எம்.நாஸர் முன்மொழிய எம்.ரி.எம்.நவாஸ் வழிமொழிந்தார்). செயலாளராக எம்.ஏ.சி. சனூன் தெரிவு செய்யப்பட்டார். ( எம்.ஐ. ஜாபிர் முன்மொழிய எம்.நாஸர்  வழிமொழிந்தார்.).உபதலைவராக  எம்.ஐ. ஜாபிர் தெரிவு     செய்யப்பட்டார்.       ( எம்.எஸ்.எம். மலீக் முன்மொழிய எம்.எஸ்.எம்.ஜான்ஸின்  வழிமொழிந்தார்.). உதவிச் செயலாளராக எம்.ஐ.எம்.ஜமாலிக் தெரிவு செய்யப்பட்டார்.

(எம்.எஸ்.எம்.ஜான்ஸின்  முன்மொழிய ரி.எம்.இப்திகார் வழிமொழிந்தார்.). பொருளாளராக ரி.எம்.இப்திகார் தெரிவு செய்யப்பட்டார். (எம்.எம்.முஸாதீக்   முன்மொழிய  எம்.எஸ்.எம். மலீக்; வழிமொழிந்தார்.). உதவிப் பொருளாளராக எம்.ரி.எம்.நவாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

(எம்.ஐ.எம்.ஜமாலிக் முன்மொழிய எம்.எஸ்.எம். மலீக்; வழிமொழிந்தார்.). மீள்கட்டுமானம் மற்றும் குடியேற்ற ஆலோசகர்களாக எம்.எஸ்.எம்.ஜான்ஸினும் (எம்.நாஸர் முன்மொழிய எம்.எம். முஸாதீக்  வழிமொழிந்தார்)  எம்.நாஸரும் தெரிவு செய்யப்பட்டனர்.(எம்.ஏ.சி.சனூன் முன்மொழிய எம்.எம். முஸாதீக் வழிமொழிந்தார்). குழு உறுப்பினர்களாக ஏ.சி.ஜலீல், எச்.சுவைஸ், எம்.எம்.எம். றியாஸ், ஏ.ஜி. நஸீர் , வை.எஸ்.எம்.அப்துல்காதர், எம்.எஸ்.எம்.மலீக் , எம்.எம்.முஸாதீக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். நிர்வாகசபை உறுப்பினரல்லாத எஸ்.ஏ.சி.எம்.நிலாம் அவர்கள் கணக்கு பரிசோதகராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்கள். 

பள்ளிவாசல் மீள்கட்டுமாணத்துக்காக ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள நன்னொடைகள் பற்றியும் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ள தொகையும் உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது. பள்ளிவாசலை மீளமைப்பதற்கான படவரைபுகளும் ஜான்ஸின் அவர்களால் விளக்கிக் கூறப்பட்டது.  பள்ளிவாசல் கட்டிட வேலை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் சகல உறுப்பினர்களும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிர்வாக உறுப்பினர்கள் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் வேண்டப்பட்டது. 

மேலும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களிடம் சில கட்டுமானப்பணிகளை கையளித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென கூறப்பட்டது. குறிப்பாக சின்னப்பள்ளி மஹல்லாவாசிகளிடம் சில வேலைகளை ஒப்படைக்கவும் ஆலோசனை கூறப்பட்டது. 

நிர்வாக உத்தியோகத்தர் தெரிவு முடிவுற்றதும், ஸலவாத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அல்ஹம்துலில்லாஹ்!


1 comment:

  1. well done ஜான்ஸின் keep it up Mashaallah

    ReplyDelete