Friday, January 20, 2012

யாழ். முஸ்லிம்களுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் உதவி


யாழ்ப்பாணம் புதிய முஸ்லிம் பிரதேசம் என்று அழைக்கப்படும் பொம்மை வெளிப்பகுதிகளில் முஸ்லிம்கள் புலிகளினால் வெளிவேற்றபட்ட பின்னர் அழிந்து போன , சேதமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகளை புனர்நிர் மாணம் செய்வதற்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் முன்வந்துள்ளது. யாழ்.மாநகரசபை உறுப்பினர் மௌலவி பி.எஸ்.சுபியான் மற்றும் பலரின் முயற்சியால் அகில இலங்கை முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் கேகாலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீமிடம் விடுத்த வேண்டு கோளையடுத்து இதற்கான நிதியுதவி வழங்கப்பட் டுள்ளது.


சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் லீக் உதவிச் செயலாளர் ஆர்.எம். இல்யாஸ், மற்றும் செயற் குழு உறுப்பினர் எம்.எஸ். ரஹீம் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் புனர் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

No comments:

Post a Comment