முஹம்மத் ஜான்சின்: கடந்த 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை யாழ்;ப்பாணத்தில் இடம்பெற்ற ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயாந்த ஏராளமான முஸ்லிம்கள் வருகை தந்திருந்தார்கள். இந்த ஒன்று கூடல் நிகழ்வுகளில் ஒன்றாக உதைப்பந்தாட்டப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விளையாடிய யாழ் முஸ்லிம் உதைப்பந்தாட்ட அணி அந்த ஆண்டில் மட்டும் பல்வேறு வெற்றிக் கிண்ணங்களை யாழ்ப்பாணத்தில் சுவிகரித்திருந்தது. யாழ் உதைப்பந்தாட்ட லீக் கிண்ணம், லீக் தலைவர் கிண்ணம், யாழ் மாவட்ட சம்பியன் கிண்ணம்,
உதவி அரசாங்க அதிபர் பிரிவு சம்பியன் கிண்ணம் மற்றும் தூயஒளி வெற்றிக் கிண்ணம் போன்ற ஐந்து சம்பியன் போட்டிகளில் கலந்து கொண்டு யாழ் முஸ்லிம் அணி வெற்றி பெற்றிருந்தது.
1990 ஜுனில் கொழும்புக்கு தேசிய மட்டப் போட்டிகளுக்காக வந்தவர்கள். வரும் வரையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வெற்றிகொள்ள முடியாத அணியாக திகழ்ந்தார்கள்.
1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த பின்னர் புத்தளத்தில் விளையாடிய யாழ் முஸ்லிம் அணி தனது பெயரை புத்தளம் யுனைடட் என்று மாற்றிக் கொண்டது. 1990களில் இளம் வீரர்களாக களமிறங்கியவர்கள் இன்று 'யாழ் முஸ்லிம் ஓவர் 40' என்ற அணியை நடத்தி வருகின்றனர். எம்.எம்.முனாஸ், ஆர். முஸாதீக், ஜான்ஸின், ஐ.நசூர், எம்.எம்.ஜஸுர், ரஜப்,ஜே. ஜுனைஸ், நிலாம்தீன்,ஏ. வாஹிர்,ஐ. இர்ஷாத்,ஏ.எஸ். சமீர், ஏ.சி. ஆஸாத், ஏ.சி. நிகார், ஜைனூஸ், ராஜன் ஜனோபர், எம்.சீனாஸ், முஹம்மத் ஆகியோர் யாழ் முஸ்லிம் அணி சார்பாக களமிறங்கினர்.
சென்நீக்கிலஸ் சார்பிலும் பல முக்கிய வீரர்கள் களமிறங்கியிருந்தனர். யாழ் முஸ்லிம் அணி சார்பில் முனாஸ் (முன்னாள் பந்து காப்பாளர்) லாவகமாக சிறப்பாக ஒரு கோலைப் போட்டார். பதிலுக்கு நென் நீக்கிலஸ் அணியும் ஒரு கோலைப் போட்டதால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இப்போட்டியைக் கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தந்திருந்தனர்.
1990ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாறானதொரு ரசிகர் கூட்டம் யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் ஒன்று சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகவிருந்தது. முஸ்லிம்களின் அணி மிகச் சிறப்பாக விளையபடியதாகவும் போட்டியை ரசிக்கக் கூடியதாக இருந்ததாக அங்கு திரண்டிருந்த மக்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment