Thursday, February 2, 2012

வலைத்தள தெருக் கோழி சண்டை வேண்டாம்

''சின்னபள்ளிவாயல் நிகழ்வுகளும் - ஜான்ஸின் எனும் மனிதனின் குழப்பங்களும்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஒரு யாழ்ப்பாண முஸ்லிம் வலைத்தளம் பதிவு செய்திருந்தது , அதேபோன்று அதற்கு எதிராகவும் , புதிராகவும் எமது யாழ்ப்பாண முஸ்லிம் நபர்கள் சிலரினால் நடத்தப்படும் வலைதலங்களில் செய்திகள் நாற்றம் எடுக்கும் அளவுக்கு வெளியாகின்றன அவை மிகவும் கவலையான விடயம் அதற்கு லண்டனில் வாழும் ஒரு யாழவன் -அலி ரிஷான்- தனது ''முகப்பு நூலில்'' Face book இந்த தெருச் சண்டை தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார் அந்த கருத்துக்கள் மிகவும் சிறந்த கருத்துக்களாக எமக்கு பட்டதால் யாழ் முஸ்லிம் மண் அந்த அவரின் கருத்தை இங்கு தருகிறது வாசித்த பின்னர் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் .


அலி புலி ரிஷான் அவர்களின் கருத்து- ''புலிகள் நம்மை அடித்து விரட்டியபோது சூடு சொரணை இல்லாமல் வாலை சுருட்டி கொண்டிருந்த எமது சமூகம் ( எப்போதும் எம்மில் சிலர் விதிவிளக்கு) இப்போது அழிந்து கிடக்கும் எமது தாயக மண்ணை மீள் உருவாக்கும் முயற்சியில் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்வது வலைதளங்களில் நாற்றம் எடுக்கிறது. இது மிகவும் கவலை தருகிறது . வேண்டாம் இந்த தெருச் சண்டை ஒருவர் நன்மையை செய்யதால் அவருக்கு உதவுவோம் அல்லது மௌனமாக இருப்போம். இன்னும் 20 வருடங்களில் யாழ்பாணத்தில் முஸ்லிம்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிந்திப்போம் அதற்கு அமைவாக திட்டமிட்டு செயல்படுவோம் அதுதான் எமக்கு பொருத்தமான வேலை'' ,


''நான் இங்கு எவரையும் குற்றவாளியாக குறிபிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும் -எங்கட சமூகம் ஒரு விசயத்திலதான் முன்னேறி இருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியை பூட்டி இருட்டடி , ஒழுங்கை லைட்டை உடைத்து இருட்டில் வருபவருக்கு இருட்டடி கொடுத்த சமூகம் இன்று வலைதளங்களில் இருட்டடி கொடுகிறது- திருந்துவோம் பள்ளிகளையும் , வீதிகளையும் , வலைதளங்களையும் ஒற்றுமைக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்துவோம்'' - இவன் இருட்டு ரிஷான் அலி புலி ரிஷான் .

No comments:

Post a Comment