Sunday, February 26, 2012

யாழ் சோனகதெருவை நாசம் செய்த துரோகிகள் யார்?

ஒரு தமிழ் சினிமா.சிடிசன்  என்று ஞாபகம். “அத்திப்பட்டி” என்ற கிராமமே சில நயவஞ்சக சமூக விரோதிகளால் அடியோடு அழிக்கப்படுகிறது. அதில் தப்பிய நாயகன் இவர்களை பிடித்து சட்டத்தின் முன்பு ஒப்படைத்து நீதிபதி அனுமதியுடன் இவர்களிற்கான தண்டைனையையும் கூறுகிறான். அந்த தண்டனை இது தான். “நம் சமூகத்தை அழித்த இவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளக் கூடாது. பெண்கொடுத்தல், பெண் எடுத்தல், மரணத்தில் கலந்து கொள்ளல், வர்த்தகம் செய்தல் என அனைத்து விதமான சமூக தொடர்புகளையும் அறுத்து இவர்களை தனிமைப்படுத்துவது தான் அந்த தண்டனை”.
குறைந்த பட்சம் இந்த தண்டனையையாவது இவர்களிற்கு எம்மால் சட்டத்திற்கு அப்பால் நின்றும் அளிக்க முடியும். செய்வோமா நாம்?  செய்ய தயாரா நாம்? இந்த சமூக விரோதிகளை முடக்கப்பட்ட ஜடங்களாக மாற்ற நம்மால் முடியும் ஒத்துழைப்போமா நாம்? இதை செய்தால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் முதுகெலும்புள்ளவர்கள் என்பது உண்மைப்படுத்தப்படும். 

புலிகளுடனான மூன்று தசாப்த யுத்தம் பிரபாகரனின் மரணத்துடன் முடிந்து போனது. யாழ் ஏ9 சாலை திறக்கப்பட்டது. பொது போக்குவரத்து மக்களிற்காக திறந்து விடப்பட்டது. யாழ் குடா நாட்டை நோக்கி மக்கள் வெள்ளம் அலை மோதியது.

யாழ்ப்பாண முஸ்லிம்களும் தங்கள் சொந்த மண்ணை காண ஆவலுடன் சென்றனர். அங்கே அவர்களிற்கு இருந்ததெல்லாம் இடிந்த கட்டிடங்ள் மட்டுமே. சோனக தெரு பெருமளவில் சிதைக்கப்பட்டதற்கு மூல காரணம் புலிகளோ அல்லது தமிழர்களோ அல்ல. மாற்றமாக யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த, அந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, தங்களை சமூக சேவகர்களாளக இனங்காட்டிய மனிதர்களே இதற்கு மூல காரணம் எனும் உண்மை பின்பே புரிந்தது.

இவர்கள் யார் என்பது நம்மில் பலரிற்கும் தெரியும். ஆனால் அவர்களை பின்னால் பேசும் நாம் அவர்கள் முன்னாள் சிரிக்கின்றோம். உறவு பாராட்டுகின்றோம். ஒரு வகையில நாமும் துரோகிகளே. இந்த சமுதாய விரோத சக்திகளை அங்கீகரித்ததன் ஊடாக, நாம் நம் சமுதாயத்திற்கு துரோகிமிழைத்துள்ளோம். இவர்கள் தொடர்பான தகவல்கள் பல திரட்டப்பட்டு ஆதார ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதை இன்னும் உறுதிப்படுத்த நாம் சில நகர்வுகளை மேற்கொண்டோம். இப்போது அது மேலும் அறுதியாகியுள்ளது. 

இந்த சமூக விரோத செயற்பாட்டை புரிந்த துரோகிகளையும் அவர்கள் செய்த துரோகங்களையும் கண்மூகூடாக கண்ட சாட்சிகள் எம்மிடையே இன்னும் உயிர் வாழ்கின்றனர். இவர்கள் சோனக தெருவை நாசம் செய்த விவகாரம், வாய்க்கு வாய் கதையாக பிரஸ்தாபிக்கப்பட்டதே தவிர இவர்கள் தொடர்பான விசாரணைகளோ, ஒழுக்காற்று நடவடிக்கைகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அவர்களும் சமூக தலைவர்களாக, சமூக சேவகர்களாக தம்மை இப்போதும் இனங்காட்டி வருகின்றனர். 

இவர்கள் தொடர்பான விசாரணைகள் அவசியம். இவர்கள் சமூகத்தின் முன் நிறுத்தப்பட்டு அதற்கான தண்டணைகள் வழங்கப்படல் அவசியம். சோனக தெரு அழிந்து போனதற்கும், இன்று சோனக தெருவின் நிலங்கள் தமிழர்களிடமும், கத்தோலிக்கர்களிடமும் பறிபோனதற்கும், யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீளகுடியமர முடியாமல் பிற மாவட்டங்களில் கஷ்டப்படுவதற்கும் முல காரணம் இவர்களே.

இதில் நேரடியாக, மறைமுகமாக ஈடுபட்டவர்கள், அனுசரணையாக இருந்தவர்கள், உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் அனைவரும் இதில் குற்றவாளிகளே. இந்த குற்றவாளிகளே.

இந்த குற்றவாளிகள் தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்களையும், சாட்சிகளையும் எமக்கு தெரியப்படுத்துள்கள். இந்த சமூக விரோதிகளை விழுத்த எமது தளம் ஒரு பொறி வைத்தது. அதில் அவர்கள் மாட்டியும் கொண்டார்கள். 

யாழ் சோனகதெருவை நாசம் செய்த இந்த நயவஞ்சகர்களை இனங்காணும் பட்டியல் இன்னும் பூர்த்தியாகவில்லை. உங்களிற்கு தெரிந்த ஊகங்கள் அற்ற, உண்மையான ஆதாரபூர்வ தகவல்களை எங்களிற்கு ஈமெயில் மூலம் அனுப்பி வையுங்கள். இந்த விவரங்கள் திரட்டப்பட்டு, சாட்சிகளுடம் ஒப்பீடு செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் எந்த அயோக்கியன் எதை செய்தான், அவனிற்கு இந்த விடயத்தில் துணை போன அயோக்கியர்கள் யார் என்பன போன்ற தகவல்களை நாம் வெளியிடுவோம். 

எம் சமூகத்தவர்களுடன் ஒன்றிணைந்து இவர்களிற்கு எதிராக சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். நாளைய சோனக தெருவென்பது இந்த சமூக விரோதிகள் அற்ற சோனக தெருவாக மாற வேண்டும். அதை அப்படி மாற்றுவது எமது கடமையாகும். உங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக இந்த விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். நம் சமூகத்தை நாசம் செய்த இந்த நயவஞ்சக நரிகளை நம் சமூகத்தில் இருந்து அடியோடு அகற்றுவதே இன்று நம் யாழ்ப்பாண சமூகத்திற்கு செய்யும் பெருங்கடைமையாகும்.
அன்புடன் - ஆசிரிய பீடம்
பிற்குறிப்பு (சில கட்டுரைகள் இந்த நயவஞ்சகர்களை காப்பாற்றுவது போல் உங்களிற்கு உணர்வை ஏற்படுத்தி இருக்கும். அப்படியல்ல. அவர்கள் மீதான குற்றம் சமுதாயத்தின் முன் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.)
http://www.jaffnamuslimbase.com

No comments:

Post a Comment