குறித்த திகதியின் BBC தமிழோசையை இணையத்தின் மூலம் கேட்க முடியும். செய்தியறிக்கையில் இடம் பெற்ற ஒரு செய்தியில் பாவிக்கப் பட்ட வார்த்தைகள் தொடர்பில் நான் BBC தமிழோசைக்கு அனுப்பி வைத்துள்ள எதிர்ப்பு கீழே இணைக்கப் பட்டுள்ளது. மேற்படி விடயம் குறித்து உங்கள் தளங்களில் செய்திகளை வெளியிடும்படியும், எதிர்ப்பை வெளியிடும் படியும் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
02/02/2012 அன்றைய செய்தியறிக்கையில் பிலிப்பைன்சில் அல் சயாப் போராளிகள் 3 பேர் கொல்லப் பட்டமை தொடர்பான செய்தியில், கொல்லப்பட்ட ஒரு மலேசிய போராளி குறித்து குறிப்பிடும் பொழுது ''ஒருவன்'' , ''என்பவன்'' , ''இவனை'', போன்ற நாகரிகமற்ற சொற்கள் பாவிக்கப் பட்டன.
அதே நேரம், விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் பற்றி நீங்கள் வழங்கிய செய்திகளில் ''கொல்லப்பட்டார்'', ''என்பவர்'' , ''இவரை'' போன்ற பார்லிமெண்டரி சொற்களை பாவித்தீர்கள்.ஏன் இன்றுவரை கூட பிரபாகரனைக் குறித்து நாகரீகமான வார்த்தைகளையே பாவிக்கின்றீர்கள்.
ஏன் இந்த இரட்டை வேடம்? ஏன் இந்த நயவஞ்சகத்தனம்?

BBC தமிழோசைக்கு விடுதலைப் புலிப் பயங்கர வாதிகளுடன் இரகசிய தொடர்பு உள்ளதா? அல்லது பிலிபைன்சில் கொல்லப்பட்டவர்கள்
மதத்தால் இஸ்லாமியர் என்ற காழ்ப்புணர்ச்சியா? BBC தமிழோசை நடுநிலையான ஊடகம் இல்லையா? இதனை நீங்கள் நேயர் நேரத்தில் வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இனாஸ்
யாழ்ப்பாணம்.
No comments:
Post a Comment