Tuesday, February 28, 2012

யாழ் சோனவனின் புத்தி !!!!!

யாழவன் :யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியானின் முயற்சியால் யாழ் சோனக தெருவின் பல வீதிகள் காபர்ட் போடப்பட்டு , வீதிகளுக்கு பிரகாசமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மௌலவி சுபியானின் பல மாதங்களாக மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டுவருகிறது அதேவேளை இதை குழப்பவும் சில யாழ் மாநகர சபை உறுப்பினர் செயல்படுவதாகவும் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார் .

 மற்ற யாழ் மாநகர சபை உறுப்பினர்களும் இந்த முயற்சியை மேட்கொண்டிருந்த போதும் மௌலவி சுபியானின்அயராத முயற்சியால் காபர்ட் போடப்பட்டு , வீதிகளுக்கு பிரகாசமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்லஸ் தெரிவித்துள்ளாராம் அதனால் வீதியில் பொருத்தபட்டுள்ள அபிவிருத்தி விளம்பர பலகைகளில் மௌலவி சுபியானின் பெயர் இடம்பெற்றுள்ளது . இதற்கு மற்ற யாழ் மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் தமது பெயர் இடம்பெறவில்லை என்று குறைபட்டுள்ளனாறாம்.

யாழ்பாணத்தில் முஸ்லிம்களின் காணிகள் வேகமாக அடுத்தவர்களுக்கு விற்பனை செய்யபடுகிறது , முஸ்லிம் பிரதேசம் பறிபோய் கொண்டிருகின்றது. அதை பற்றி பெரிதாக அக்கரை காட்டாத நம் சமூக பெரிசுகள்  காபர்ட் போட்டதும்  ,  மின் விளக்குகள் பொருத்தியதும் நான் தான் என்று சண்டை போடுவதில் காலத்தை  ஓட்டுதுகள் 

No comments:

Post a Comment