Tuesday, January 31, 2012

யாழ் ஐதுறூஸ் மகாம் மஸ்ஜித் திருத்தப்படுமா?

எம்.எஸ்.அப்துல்லாஹ்: யாழ்ப்பாணத்தின் பள்ளிவாசல்கள் படிப்படியாக மீளமைக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயமே. தற்போது சின்னப்பள்ளிவாசல் மீளமைக்கப்பட்டு வருகின்றது. பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் பள்ளிவாசலை மீளக்கட்ட அப்பள்ளிவாசலின் மஹல்லாவாசிகளைக் கொண்ட மீளமைப்புக் குழுவின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்குறியது. அக்குழுவின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் திருத்தப்படாமல் இருக்கும் ஐதுறூஸ் மகாம் மஹல்லாவாசிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.


சில மஹல்லாவாசிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்னொருவர் அதைச் செய்வார் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தனியொருவரின் செயற்பாட்டுக்காக காத்திருப்பதை விட கூட்டாக அதனைச் செய்து முடிப்பதே சாலச் சிறந்ததாகும்.

யாழ்ப்பாணத்தில் வசிக்காவிட்டாலும் தற்போதுள்ள இடங்களிலிருந்தவாறு அப்பள்ளியைக் கட்டி முடிக்கலாம். ஆனால் அதற்கு நம்பிக்கையாளர் சபை ஒன்று தேவையாக இருக்கும். ஏற்கனவே 1990ஆம் ஆண்டு நம்பிக்கையாளர் சபையில் இருந்த பலர் தற்போதும் உயிருடன் இருப்பதால் அவர்கள் கொழும்பில் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து புதிய உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒரு நம்பிக்கையாளர் சபையை உருவாக்கலாம்.

இதனூடாக முயற்சி செய்தால் பள்ளிவாசலைக் கட்டி முடிக்கலாம். அதேவேளை பள்ளிவாசலின் பின்னாலுள்ள காணியில் அறைகளைக் கட்டி வாடகைக்கு கொடுத்தால் பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு ஆட்களும் வருவார்கள். இமாமுடைய சம்பளத்தைக் கொடுக்க வருமானமும் இருக்கும். இப்பள்ளியை மீளக்கட்டுவதனூடாக ஐதுறூஸ் மகாம் வீதிக்கு புத்துயிரும் கிடைக்கும்.

குறித்த ஐதுரூஸ் மகாம் பள்ளி பற்றி செய்தி ஒன்றை ”யாழ்முஸ்லிம் மண்” வலைத்தளம் செய்தியாக பதிவு செய்திருந்தது. தற்போது அப்துல்லாஹ் என்பவர் இது தொடர்பான செய்தியை உங்களின் இணையதளத்தின் பதிவு செய்துள்ளார். மகிழ்ச்சியான விடயம் கண்டிப்பாக அந்த பள்ளி பற்றிய அக்கறை அனைவருக்கும் வேண்டும் அப்துல்லாஹ்வுக்கும் ,லங்காமுஸ்லிம் -க்கும் எமது நன்றிகள்

 நன்றி  lankamuslim.org எமது படத்துடன் பதிவு செய்தமைக்கு

1 comment:

  1. ஒரு நல்ல ஆலோசனை.
    இன்ஷா அல்லாஹ் இது பற்றிய கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப் பட வேண்டும், அதனைக் கொண்டு
    ஒரு குழுவை அமைத்து மேற்படி பணியை முன்னெடுக்கலாம்.

    இது தொடர்பான முன்னேற்றங்களையும் தொடர்ந்து உங்கள் தளத்தில் பிரசுரிக்கவும்.

    ReplyDelete