Tuesday, December 27, 2011

ஐதுரூஸ் மகான் பள்ளி இன்னும் இடிந்தே கிடக்கின்றது !!!

இது 'யாழ்முஸ்லிம் -மண்ணின் செய்தி: யாழ்பாண பள்ளிவாசல்களில் பெரும்பாலான பள்ளிகள் அல்லாஹ்வின் உதவியால் பலரின் முயற்சியால் மீண்டும் ஓர் அளவு இயங்க தொடங்கிவிட்டது. பாங்கு சொன்னால் பள்ளிக்கு வருவதற்கு நமவர்கள் இல்லாதபோதும் கட்டிடம் மறுபடியும் எழுத்து நிற்கின்றது மாஷா அல்லாஹ் மகிழ்ச்சியான விடயம் .ஆனால் ஐதுரூஸ் மகான் பள்ளியை அப்படியே இடித்து போய் கிடக்கிறது ஐதுரூஸ் மகான் வீதியில் உள்ளவர்கள் எவரும் தங்களின் காணிகளை விற்கவில்லை.
அவர்கள் பிரான்சிலும் , ஜெர்மனிலும் , அவுஸ்ரேலியாவிலும் , லண்டனிலும் குடும்பமாக வாழ்கிறார்கள் , ஏனையவர்கள் கொழும்பில் வாழ்கிறார்கள் கஷ்டப்படும் குடும்பங்கள் அந்த வீதியில் இல்லை .ஆனால் அவர்களின் பள்ளியை இன்னும் அவர்கள் திருத்த முன்வரவில்லை அந்த ரோட்டில் வீடுகளை கொண்ட சிலர் வெளிநாட்டில் இருந்துவந்து தமது வீடுகளை திருத்தி கட்டுகிறார்கள் அனால் அந்த பள்ளியை திருத்தி அமைக்க எவரும் முன்வரவில்லை காரணம் தெரியவில்லை . மிகவும் கவலையாக உள்ளது என்று யாழ்பாணத்தில் மீள் குடியேறியுள்ளவர்கள் யாழ்பாணம் ஐந்து சந்தியில் நின்று கவலைப்பட்டு கதைப்பதாக யாழவன் எமக்கு தெரிவித்தான். அந்த யாழவனின் தகவலையும் செய்தியையும் 'யாழ்முஸ்லிம் -மண்' வலைத்தளம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.

1 comment:

  1. அல்லாஹ்வின் உதவியால் பலரின் முயற்சியால் மீண்டும் ஓர் அளவு இயங்க தொடங்கிவிட்டது. பாங்கு சொன்னால் பள்ளிக்கு வருவதற்கு நமவர்கள் இல்லாதபோதும் கட்டிடம் மறுபடியும் எழுத்து நிற்கின்றது மாஷா அல்லாஹ் மகிழ்ச்சியான விடயம் -- Do you have any psychological Problems ? எதற்கு மாஷாஅல்லாஹ் ? பள்ளிக்கு வராமல் இருப்பதற்கா ?
    லங்கா முஸ்லிம்மும் இது போலதான்...
    ஷாமில் மொஹம்மத்-

    ReplyDelete