Friday, December 30, 2011

யாழ். பிரதி மேயராக சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

யாழ்முஸ்லிம் மண் வலைத்தளம் சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது:+ யாழ். பிரதி மேயராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.இவர் விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.யாழ். மாநகர சபை தேர்தலையடுத்து அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்த மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமையவே சட்டத்தரணி ரமீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.



இதற்காக ரீகன் என்றழைக்கப்படும் இளங்கோ, யாழ். பிரதி மேயர் பதவியை இராஜனாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நிறைவேற்றயமைக்கான நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் றிசாட் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment