இது 'யாழ்முஸ்லிம்மண்' வலைத்தளச் செய்தி:யாழ். மாநகரசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த வருடத்திற்கான
நெல்சிப் திட்டத்தின் கீழ் நான்கு வீதிகளை புனரமைப்பதற்கு ஆளும் கட்சியின்
அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதென யாழ் மாநகரசபையில் உறுப்பினர் எமக்கு யாழ்
முஸ்லிம் மண்ணுக்கு தெரிவித்தார். செட்டியார் ரோடு வீதி 10
இலட்சம் ரூபா செலவிலும் ஜின்னா வீதி, ஆசாத் வீதி, காதி அபூபக்கர் வீதி,
ஐதுர்ஸ் மக்கான் வீதி, வடிகால் மதகுகள் திருத்தம் என்பன 15 இலட்சம் ரூபா
செலவிலும், மாவடிவீதி, கமால் வீதி, வைரவர் கோயில், கற்குளம் வீதி என்பன 12
அரை இலட்சம் ரூபா செலவிலும் பாரதி வீதி அதன் உப ஒழுங்கைகள், ஸ்ரான்லி
ஒழுங்கை, பேரின்பநாயகம் வீதி என்பன 10 இலட்சம் ரூபா செலவிலும்
திருத்தப்படவுள்ளன.
ஆனாலும் இந்த நீதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள விடாது பலர் கடுமையான எதிர்ப்பையும் கடுமையான வன்முறைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்படி இப்புனரமைப்பு வேலைகள் 47 அரை இலட்சம் ரூபா மதிப்பீட்டில் புனரமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் அனுமதி வழங்கவில்லை என்று மாநகரசபை உறுப்பினர் தெரிவித்தார்.

இன்னும் நிறைய யாழ் நியூஸ்களை நீங்கள் தரமுடியும் என்று கருதுகிறேன்
ReplyDelete