Tuesday, December 27, 2011

இடம்பெயர்ந்த வடமாகாண ஆசிரியர்களை மீண்டும் வடமாகாணத்தில் இணைக்க நடவடிக்கை

யாழ் இஷாக்: வடமாகாணத்தில் வசித்து இடம்பெயர்ந்து ஏனைய மாகாணங்களில் உள்ள அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் வடமாகாண முஸ்லிம் ஆசிரியர்கள் ஆசிரிய உதவியாளர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மீண்டும் கடமைப் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மே ற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகையால் உரிய ஆசிரிய உதவியாளர்கள் விண்ணப்பப் படிவத்தினை கடமையாற்றிக்கொண்டிருக்கும் வலயக் கல்வி அலுவல கங்களில் பெற்று பூரணப்படுத்தி செயலாளர், கல்வி அமைச்சு வடமாகாணம் என்ற விலாத்திற்-கு 31.12.2011 ற்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு வடமாகாணத் தின் கல்வி அமைச்சின் யெலாளர் அறிவித்துள்ளார்.

நன்றி லங்காமுஸ்லிம் 

No comments:

Post a Comment