வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாடு விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்தல் மற்றும் காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குதல் போன்றன தொடர்பில் கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில்லை மற்றும் வடக்கு கிழக்கை மீள இணைப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பதா அல்லது மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதா என்பது நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக, நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு வழங்கப்படாத நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் எவ்வாறான உறவுகளை பேணுவது என்பதனை கட்சியி;ன் நிறைவேற்றுக்குழு தீர்மானிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment