எகிப்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின் இரண்டாவது கட்டத் தேர்தலில் 90 சதவீத வாக்குகளை பெற்று இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமான இஃவானுல் முஸ்லிமீன்- எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகிய பிறகு தேர்தலில் போட்டியிட ஃப்ரீடம் அண்ட ஜஸ்டிஸ் கட்சியை உருவாக்கியது. எகிப்தின் ஆட்சியை இஃவான்கள் கைப்பற்றுவார்கள் என அரசியல் நோக்கர்கள் கருதினர். கணிப்பு பொய்யாகவில்லை.
முதல் கட்ட தேர்தலில் 40 சதவீத வாக்குகளை பெற்ற ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி இரண்டாவது கட்ட தேர்தலில் 60 இடங்களில் 40-யும் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வ பத்திரிகையான அல் அஹ்ராம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னொரு இஸ்லாமிய கட்சியான அந்நூர் 13 இடங்களை கைப்பற்றியுள்ளது. இடதுசாரி மற்றும் வலசாரி கட்சிகளுக்கு மீதமுள்ள இடங்கள் கிடைத்துள்ளன.
கடந்த நவம்பர்18-ஆம் தேதி முதல் கட்ட தேர்தலிலும், டிசம்பர் 14,15 தேதிகளில் நடந்த இரண்டாவது கட்ட தேர்தலிலும் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ள ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. ஆனால், அடுத்த வருடம் ஜூன் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தல் முடியும் வரை அதிகாரத்தை ஒப்படைக்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தற்போதைய ராணுவ அரசு உள்ளது. உடனடியாக ராணுவம் அதிகாரத்தை சிவில் அரசிடம் ஒப்படைக்கக்கோரி எகிப்தில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது

No comments:
Post a Comment