Sunday, December 25, 2011

யாழ் நோக்கி 750 கிலோமீற்றர் தூரத்தில் சூறாவளி

யாழ்ப்பாணத்திலிருந்து 750 கிலோமீற்றர் தூரத்தில் கிழக்கு கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த சூறாவளி வடமேல் திசை நோக்கி நகரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதால் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்துள்ளதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.


இதனால் மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் காற்று 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment