Wednesday, December 28, 2011

புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்துவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்தனர்

விடுதலைப் புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் அதிகமாக வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் விரட்டியடிக்ககப்பட்ட அவர்களுக்கு அவர்களின் பாரம்பரியமாக வாழ்விடம் அவர்களிடம் திருப்பி கொடுக்கப்படவேண்டும். மேற்குலகம் என்னைத் தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது.
அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளியாகும் டெக்கன் குரோனிக்கல் நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வியில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


புலிகளின் அதே மனோபாவத்துடனேயே தமிழ்க் தேசிய கூட்டமைப்பு உள்ளது. அவர்களின் கோரிக்கைகளான வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் என்னைக் கைதுசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுபியுள்ளார்.
நன்றி: லங்காமுஸ்லிம் 

No comments:

Post a Comment