Friday, December 30, 2011

யாழில் மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு விசேட செயற் திட்ட கருமபீடம்

யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2012 ஆம் ஆண்டில் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



யாழில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் புத்தளத்தில் வீடு வளவுகளோடு வாழ்ந்து விட்டு இங்கு வந்துள்ளனர். அவர்களின் வீட்டுத் தேவைகளைக் கருத்திற்கொண்டு காணி உரித்து இருந்தால் அக்காணிகளிலேயே வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் மனிதாபிமானத்துடன் சில விடயங்களை செய்து கொடுத்துள்ளதாகவும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து செயற்படுத்துவதற்கு விசேட செயற்திட்ட கருமபீடம் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment