Sunday, December 25, 2011

கணிதப்பிரிவில் யாழ் .மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்

உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவன் தேசியரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  நேற்றுக் காலை 10 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இரவு 11 மணிக்கே வெளியாகியது.
கொழும்பு மாவட்டத்தில் காலை வெளியாகும் பெறுபேற்றினை மாலை 3 மணிக்கு பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், நள்ளிரவு நெருங்கிய சமயத்திலேயே பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. முதற்கொண்டு கிடைத்த தகவல்களில் அடிப்படையில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச் சேர்ந்த கமலக்கண்ணன் கமலவாசன் என்ற மாணவன் 3 ‘ஏ’ (3.1167 இஸற் புள்ளிகள்)
சித்திகளைப் பெற்று, கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
அதேவேளை யாழ்பாணத்திலிருந்து புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் பலரும் இலங்கையின் பல பாகங்களில் பரிச்சை பெறுபேறுகளில் கலர் காட்டியுள்ளதாக நாம் அறிகிறோம் விரைவில் அது தொடர்பான விபரங்களை வெளியிடுவோம்

No comments:

Post a Comment