Monday, December 26, 2011

யாழ்.களச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்த சில செல்வந்தர்கள் உலமாக்கள் கல்விமான்கள் என்போர் யாழில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள மக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். பல்வேறு இயக்க வேறுபாடுகள் இட்டுக்கட்டுகள் ஒற்றுமையின்மை வாலிபர்கள் தூரநோக்கின்றி செயற்படும் தன்மை என்பன இதற்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

ஒஸ்மானியாக் கல்லூரியின் தற்போதைய அதிபரை மக்களும் மாணவர்களும் அதிகம் நேசிக்கின்றனர். க.பொ.த. சாதாரணதரத்தில் சித்தியெய்தியவர்கள் க.பொ.த. உயர்தரத்தை ஒஸ்மானியாவிலேயே தொடர ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதனை நிவர்த்தி செய்வதை விட்டு விட்டு அதிபரை மாற்ற சில அமைப்புக்கள் முயற்சி செய்வதாக தெரிகின்றது.
அச்சங்கம் மாதத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாவை முன்னாள் மாணவர்களிடமிருந்து திரட்டி தற்போதுள்ள அதிபரிடம் வழங்கினால் அவர் பல்கலைக்கழக மாணவர்களையும் திறமையான தனியார் ஆசிரியர்களையும் வைத்து உயர்தர வகுப்புக்கனை செய்வாரல்லவா? ஏன் உதுகளுக்கு இது விளங்கமாட்டேனென்கிறது?

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி சிறப்பாக இயங்கும் காலத்திலேயே திறமையுள்ள மாணவர்கள் பலர் தமிழ் பாடசாலைகளில் தமது உயர்தரக் கல்வியைக் கற்றிருந்தனர். இன்றுள்ள பல வைத்தியர்கள் எஞ்சினியர்கள் என்போர் ஒஸ்மானியாவில் கல்வி கற்காதவர்களே.

யாழ்ப்பாணம் சோனகதெருவில் காணிகள் விலை அதிகரித்துள்ளதாக அறியவருகின்றது. யாழ்ப்பாணத்தின் ஏனைய பிரதேசங்களில் ஒரு பர்சஸ் காணி 4இலட்சமாக இருக்கும் போது சோனக வட்டாரத்தில் ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரமாக காணி விலைகள் முன்னர் காணப்பட்டது. தற்போது இந்த விலை மட்டம் மூன்று இலட்சமாக அதிகரித்து உள்ளது. எதிர்வரும் மாதங்களில் இந்த விலை மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

யாழ் குளத்தடி வீதியிலுள்ள காணிகள் சில சர்வதேச பாடசாலை ஒன்றுக்காக விற்கப்பட உள்ளதாக கதை உலாவுகின்றது. அவை விற்கப்படுமிடத்து பாடசாலைக் கட்டிடத்துடன் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் அமைக்கப்படலாம் என நம்பப்படுகிறது. எனவே விற்கக் கூடியவர்கள் குடியிருப்பாளர்களுக்கு மட்டும் விற்றால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment