Sunday, January 29, 2012

டாக்டர் அப்துல் கலாமை சந்தித்த யாழ் முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகள்.

யாழ் முற்றவெளிக்கு முன்பாக உள்ள கேட்போர் கூடத்தில் விஷேட உரை நிகழ்த்திய இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமை யாழ் முஸ்லிம்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று மதியம் சந்தித்தனர். ஜனாப் எம்.ஏ.சி.முபீன்[Trustee -Pudupalle of Jaffna], Mr.தாஹிர் (சியானாஸ்), Mr.அஸ்மின் (நளீமி) ஆகியோர் அப்துல் கலாமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.



யாழ்ப்பாண முஸ்லிம்களின் பூர்வீகம், பண்பாடு, வரலாறு மற்றும் விடுதலை புலிகளாள் பலவந்தமாக துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்டமை, புத்தள உப்புவெளி அகதி வாழ்க்கை, மீள்குடியேற்றத்தில் உள்ள சவால்கள், முஸ்லிம்களிடையே வீழ்ச்சியடைந்து வரும் கலாச்சாரம் மற்றும் பல விடயங்களை ஜனாதிபதிக்கு இவர்களால எத்தி வைக்கப்பட்டது.

விடயங்களை பொருமையாகவும் நிதானமாகவும் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி அப்துல் கலாம் மேற்படி விடய்த்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையுடனும் பொருமையுடனும் இருக்க வேண்டுமெனவும், நடந்தவற்றை மன்னித்து விட்டுக்கொடுப்புடன் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் இரு சமூகங்களும் நடக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பின் தான் கவலையும் வேதனையும் அடைவதாக கூறிய டாக்டர் அப்துல் கலாம் தன்னாலான அனைத்து விதமான உதவிகளையும் இது தொடர்பில் செய்ய முயல்வதாகவும் வாக்களித்தார்.

டாக்டர் அப்துல் கலாமுடன் வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களிடம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகள் பற்றி கூறி அவர்களது காணி சம்மந்தமான தீர்விற்கு உடனடியான பரிகாரங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment