இது 'யாழ்முஸ்லிம்மண்' வலைத்தளச் செய்தி: யாழ்பாணம் முஹீதீன் மௌலவி வீட்டில் ஏற்பட்ட வெடிப்பு வம்பவம் ஒன்றில் அவர் படுகாயமடிதுள்ளார் அவரின் உறவினரான 19 வயது இளைஞ்சன் வபாத்தாகியுள்ளார். மேலும் குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது முஹீதீன் மௌலவி மகனும் மற்றும்மொருவரும் படுகாயமடிதுள்ளார். யாழ்பாணம் ஐதுரூஸ் மகான் பள்ளியின் முஅத்தீன் ''மம்மது காக்கா'' ( மலையாலத்து மம்மது) அவர்களின் முத்த மகனான முஹீதீன் மௌலவி புலிகளால் யாழ் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தல் நிலவிய 2002 ஆண்டு காலத்தில் இருந்து பல வருடங்கள் யாழ்ப்பாண பள்ளிகளில் தொழுகையும் ஜும்ஆ வும் நடத்தி வந்தவராவார்
இவர் நீர்கொழும்பு மினுவான்கொட கல்லோலுவ பிரதேசத்தில் தனது குடும்பதுன் வசித்து வருகிறார். கடந்த கிழமை தனது வீட்டு மலசல குழியை துப்பரவு செய்யத பின்னர், காபைட் இரசாயனத்தை மலசல குழியினுள் போட்டபின்னர் தீக்குச்சி ஒன்றை பற்ற வைத்து அதை அவதானிக்க முயன்றபோது அது பெரும் சத்தத்துடன் வெடித்து பாரிய சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காபைட் இரசாயனம் மலசல குழி துப்பரவு செய்ய பயன்படுத்துவது என்பது குறிபிடத்தக்கது .
தற்போது முஹீதீன் மௌலவி ராகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இருந்த போதும் அவரின் முதுகு எலும்பு பெரியளவில் சிதைவடைந்துள்ளதாகல் இனி கால்களால் நடப்பது பற்றி அவரின் உறவினர்களால் ஐயம் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் அனைவரும் குண மடைய இறைவனை நாம் பிராத்திப்போம்.
முக்கிய குறிப்பு - திருடர்களின் கவனத்திற்கு..!
யாழ்முஸ்லிம்-மண் வலைத்தளத்திலிருந்து செய்திகளையும், மற்றும் பல இணையதளங்களில் இருந்து தகவல்களையும் , செய்திகளையும் திருடி தமது தகவல்கள் போன்று பதிவு செய்யும் யாழ்மு... வலைத்தளம் தன்னை திருத்தி கொள்ளட்டும் .
No comments:
Post a Comment