புத்தளம் மற்றும் கொழும்பு பகுதியில் வசிக்கும் யாழ்பாணத்தை சொந்த மண்ணாக கொண்டவர்கள் பலர் இணைத்து யாழ் மண்ணை நோக்கிய ஆய்வு சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களின் சமூக ஆர்வலர்களையும் இணைந்துகொண்டு ஆய்வு சுற்றுலாவை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இந்த ஆய்வு சுற்றுலாவின் போது யாழ்பாணத்தில் உள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்கள் , பொது கட்டடங்கள் என்பன தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் அவற்றை தொழில்சார் ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான தகவல்களை தொழில்சார் ரீதியில் சேகரிக்க ஏற்பாடுகளை செய்யவுள்ளனர் என்று அதன் ஏற்பாடு குழுவினர் தெரிவித்தனர்.
யாழ் மண்ணை நோக்கிய ஆய்வு சுற்றுலா ஒரு வரகாலம் யாழ்பாணத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேட்கொள்ளவுள்ளது . இந்த ஆய்வு பயணம் இன்னும் இரு வாரகாலத்தில் ஆரம்பமாகும் என்று ஏற்பாடு குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வழங்கப்படும் என்று அந்த ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது .

No comments:
Post a Comment