Friday, January 13, 2012

யாழ் சின்னப்பள்ளிவாசலை திருத்துவதற்கான அனுமதி


யாழ் சின்னப்பள்ளிவாசலை திருத்துவதற்கான அனுமதிக் கடிதத்தை பெறுவதற்கான முயற்சிகள்  கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு தற்போது அதன் நிர்வாக சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வக்பு சபையின் 2012.01.11 திகதியிடப்பட்டு பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம.எஸ்.ஜினூஸுக்கு இந்த அனுமதிக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிவாசலைக் மீளக்கட்டுவதில் இருந்த சகல தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. கட்டிடத்துக்கான வரைபுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. பள்ளியை மீளமைத்தல், அறைகளை திருத்தியமைத்தல், குளிக்குமிடம், கழிவறைகள் போன்றவற்றுக்கான வரைபுகளை கட்டிட பணிகளை பொறுப்பேற்றுள்ளவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
மேலும் தற்போது கட்டிட பணியாளர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  கட்டிட பணிக்கான பணியாளர்கள் கிடைத்ததும் இன்ஷா கட்டிட வேலைகள் ஆரம்பமாகுமெனவும், இப்பள்ளிவாசலை மீளமைக்க பணவுதவி செய்த அத்தனை அன்புள்ளம் கொண்டவர்களுக்கும்  எல்லாம் வல்ல அல்லாஹ்  உடலில் ஆரோக்கியத்தையும் செல்வத்தில் பரக்கத்தையும் ஈருலக வாழ்க்கையிலும் வெற்றியையும் கொடுப்பானாக எனவும் சின்னப்பள்ளிவாசல் நிர்வாக சபை அறிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு - திருடர்களின் கவனத்திற்கு..!

யாழ்முஸ்லிம்-மண்   வலைத்தளத்திலிருந்து செய்திகளையும், மற்றும் பல இணையதளங்களில் இருந்து தகவல்களையும் , செய்திகளையும் திருடி  தமது தகவல்கள் போன்று பதிவு செய்யும் யாழ்மு... வலைத்தளம் தன்னை திருத்தி கொள்ளட்டும் .

1 comment:

  1. உங்கள் தளத்தின் செய்திகள் நன்று.
    எனினும் உங்கள் தளத்தின் அமைப்பு, பின்னணி நிறம் என்பன பொருத்தமாக இல்லை.
    கண்ணுக்கு மிகவும் கஷ்டமாகவும், செய்திகளை தேடுவதற்கு கஷ்டமாகவும் உள்ளது.தயவுசெய்து மாற்றி அமைக்கவும்.

    ReplyDelete