Sunday, January 8, 2012

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பில் நிர்மலா ராஜசிங்கம்

ஏ.அப்துல்லாஹ்: சுமார் 70 தமிழ் புத்திஜீவிகள் கையொப்பமிட்டு தமது கோரிக்கைகளில் ஒன்றாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். இந்த அறிக்கையில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசும்போது

வடக்கு முஸ்லிம்கள் 20 வருட கஷ்டங்களின் பின்னரும் யாழ்பாணத்தில் வந்து மிகவும் கஷ்டபடுகிறார்கள். அவர்கள் தமிழ் சமூகத்தினால் வரவேற்கப் படவில்லை , முப்பது வருடங்கள் புலிகளுக்கு பின்னால் சென்ற தமிழ் தேசிய வாதிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு மே க்கு பின்னர் முஸ்லிம்களின் பிரச்சினையை ஒரு பிரதான பிரச்சினையாக பார்த்திருக்க வேண்டும் தமிழர்கள் தாம் பெரும்பான்மை இனத்திடமும் அரசாங்கத்திடமும் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதனை தம் மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க அவர்கள் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். நிர்மலா ராஜசிங்கம் இலங்கை ஜனநாயக அமைப்பு லண்டன்- என்ற அமைப்பின்  முக்கிய உறுப்பினரும் சிறந்த அரசியல் சமூக ஆர்வலருமாவார்.
.
.

நன்றி Lankamuslim.org

No comments:

Post a Comment