Tuesday, January 10, 2012

இந்த செய்தியை வாசியுங்கள் என்ன சொல்லுகிறது ???


யாழ். மானிப்பாய் வைத்திஸ்வரா சந்தியிலுள்ள தனியார் விடுதி கிணற்றில் இருந்து சடலம் குடும்பஸ்தர் ஒருவரது சடலத்தை இன்று காலை யாழ்.பொலிஸார் மீட்டுள்ளனர். மானிப்பாயைச் சேர்ந்த எஸ். யூட்டன் வயது 30 என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.


குறித்த விடுதியை விடுதியின் உரிமையாளர் வாடகைக்காக முஸ்லிம் குடும்பத்திற்காக மூன்று தினங்களுக்கு வழங்கியிருந்ததாகவும், நேற்றுடன் மூன்று நாட்கள் முடிவடைந்நதால் விடுதியை பொறுப்பேற்க வந்தபோது, துர்நாற்றம் விசியுள்ளது.

இதனை அறிவதற்காக விடுதியை முழுமையாக பரிசோதித்த போது எதுவும் காணப்படாத நிலையில், கிணற்றை எட்டடிபார்த்த போது கிணற்றுக்குள் சடலம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உடனடியாக யாழ் பொலிசாருக்கு அறிவித்ததாக குறித்த விடுதியின் உரிமையாளர் தெரிவித்தார்.

சடலம் கொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெவிரிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை நீதவான் முன்னிலையில் நடைபெறவுள்ளது. மறைமுகமாக முஸ்லிம்களை கொலையுடன் தொடர்பு படுத்து கிறது

No comments:

Post a Comment