யாழ்பாணத்திற்கு
விசேட வெளிநாட்டு , உள்நாட்டு ஜமாஆத்துக்களை யாழ்பாணத்தில் அதிகமாக
அனுப்ப கொழும்பு தப்லீக் ஜமாஅத் தீர்மானித்துள்ளதாக யாழ் தப்லீக் ஜமாஅத்
உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழ்பாணத்தில் தற்போது யாழ்ப்பாண
முஸ்லிம்களும் ஏனைய ஊர் முஸ்லிம்களும் குடியேறியும் , வியாபார நோக்கம்
கருதியும் யாழ்பாணத்தில் அதிகம் நடமாடும் நிலையில் அவர்களின் இபாதத்
விடயங்களை கவனிக்கவும் , ஊக்குவிக்கவும் மர்கசில் இருந்து விசேட
ஜமாஅத்துகளை அனுப்ப மசூரா செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
முஸ்லிம்கள் மீள்குடியேறி வரும் நிலையில் அங்குள்ள சில பள்ளிகள்
மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது போது இன்னும் பல கூடிய கவனம் செலுத்தப்
படவேண்டிய நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
What will they do?
ReplyDelete