Sunday, January 1, 2012

யாழ் மாநகர சபையில் என்ன நடைபெற்றது கூறுகிறார்கள் உறுப்பினர்கள்

M.ரிஸ்னி முஹம்மட்: யாழ் மாநகரசபையில் முஸ்லிம்களை ‘யார் இங்கு வரச் சொன்னது‘ என்றும் , ‘இந்த நாய்களை யார் விட்டது‘ என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது  லங்காமுஸ்லிம் இணையத்தளத்திற்கு இஷாக் என்ற செய்தியாளர் அது தொடர்பான  தகவல் ஒன்றையும் அனுப்பியிருந்தார் அதில் ”முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா இவ்வளவு துணிவு தந்தது? என்று தெரிவித்துள்ளார்.” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்னர் இன்னும் பல தமிழ் இணையத்தளயங்களில் குறித்த தகவல்களை கொண்ட செய்திகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இது தொடர்பாக lankamuslim.org  யாழ் மாநகர சபை உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சின் அபிவிருத்தி முன்னேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளருமான மௌலவி சுபியான் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இப்படித் தெரிவித்தார்.

நெல்சிப் திட்டத்தின் கீழ் ஜின்னா வீதி, ஆசாத் வீதி, காதி அபூபக்கர் வீதி, ஐதுர்ஸ் மக்கான் வீதி, வடிகால் மதகுகள் திருத்தம் என்பன 15 இலட்சம் ரூபா செலவிலும், மாவடிவீதி, கமால் வீதி, வைரவர் கோயில், கற்குளம் வீதி என்பன 12 அரை இலட்சம் ரூபா செலவிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரசபையில் பிரேரணை முன்வைத்த போது சில குறுக்கீடுகள் இடம்பெற்றது ஆனாலும் அந்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டது . ஆனால் ‘யார் இங்கு வரச் சொன்னது‘ என்றும் , ‘இந்த நாய்களை யார் விட்டது‘ என்று கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை தொடர்பாக இறுதி அமர்வில்  அப்படி நடக்கவில்லை ”எனக்கு தெரியானது எனக்கு அப்படி எதுவும் கேட்கவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் அவர்: பிரேரணை (சிறைகளில் வாடுவோரின் விரைவான விடுதலையும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையும்)  பிரேரணை ஒன்றை ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயக்காந், முன்வைத்து உரை நிகழ்த்தினார். இதன்போது யாழ் மாநகர சபையின் உறுப்பினர் எம்.எம்.ரமீஸ் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படத் இழப்புகளை அவற்றில் உள்வாங்குமாறு கேட்டுக்கொண்டார் அப்போது பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் அப்படியானால் பல தமிழ் மக்கள் முஸ்லிம்களால் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள் அவற்றையும் உள்வாங்க வேண்டும் என்று தெரிவித்தார் என்று lankamuslim.org க்கு மாநகர சபை உறுப்பினரும் அமைச்சின் அபிவிருத்தி முன்னேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளருமான மௌலவி சுபியான் தெரிவித்தார்.

நன்றி  lankamuslim.org

..............................................................................................................................................

ஊடகங்களில் வெளியாகியுள்ளது போன்று முஸ்லிம்களை ‘யார் இங்கு வரச் சொன்னது‘ என்றோ, ‘இந்த நாய்களை யார் விட்டது‘ என்றோ யாரும் கூறவில்லை என யாழ். மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான றமீஸ் தெரிவித்தார். மீள்பார்வை இணையத் தளத்திற்காக தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

‘ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அநியாயமாக சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது‘ எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கூறுகையில், வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற விவாதத்தில் நானும் கலந்து கொண்டு, யாழ்ப்பாண முஸ்லிம்கள் மற்றும் ஏனைய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் சுட்டிக்காட்டினேன். இதன்போது சில குறுக்கீடுகள் ஏற்பட்டது. ஆனால், யாரும் சமூகங்களை அவதூராகக் கூறவில்லை என்றார்.

நன்றி: மீள்பார்வை


No comments:

Post a Comment