இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் இறுதியில் இலங்கை வரவுள்ளார் . யாழ் , கிளிநொச்சி சம்மேளனம்அவரை சந்தித்து யாழ் சோனகர் தெருவை காண்பித்து முஸ்லிம் நிலைமைகளை விளக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது. ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் அப்துல்கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுவாராம்
Friday, December 30, 2011
யாழில் மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு விசேட செயற் திட்ட கருமபீடம்
யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2012 ஆம் ஆண்டில் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புலிகள் இழைத்த கொடுமைகளை யாழ்.மாநகர சபையில் பேசமுடியாத மிக ஆபத்தான நிலை
யாழ் இஷாக்: யாழ்.மாநகர சபையின்
2011 ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை மாநகர முதல்வர்
திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. சபை ஆரம்பித்தவுடன்
முதல்வரின் விசேட அனுமதி பெற்ற ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயக்காந்,
‘சிறைகளில் வாடுவோரின் விரைவான விடுதலையும் காணாமல் போனோர் தொடர்பான
விசாரணையும்’ என்ற தலைப்பிலான பிரேரணை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
யாழ் மாநகரை சபை உறுபினர்களை கீழ்த்தரமாக ஏசிய விந்தன்
வீடியோ:யாழ். மாநகர சபையின் சட்டத்தரணி ரமீஸ் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படத் இழப்புகள் தொடர்பாக உரையாற்ற ஆரம்பிக்கும்போது, எதிரணியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் விந்தன் முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா இவ்வளவு துணிவு தந்தது? என்று கீழ்த்தரமாக கதைத்துள்ளதுடன் யாழ் மாநகர சபை பிரதி மேயர் சட்டத்தரணி ரமீஸ் அவர்களை பேசவிடாது வன்முறையில் ஈடுபட்டுள்ளார்
யாழ் முஸ்லிம் வட்டார வீதி அபிவிருத்திக்கு நீதி சர்ச்சையின் பின் அங்கீகாரம்
இது 'யாழ்முஸ்லிம்மண்' வலைத்தளச் செய்தி:யாழ். மாநகரசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த வருடத்திற்கான
நெல்சிப் திட்டத்தின் கீழ் நான்கு வீதிகளை புனரமைப்பதற்கு ஆளும் கட்சியின்
அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதென யாழ் மாநகரசபையில் உறுப்பினர் எமக்கு யாழ்
முஸ்லிம் மண்ணுக்கு தெரிவித்தார். செட்டியார் ரோடு வீதி 10
இலட்சம் ரூபா செலவிலும் ஜின்னா வீதி, ஆசாத் வீதி, காதி அபூபக்கர் வீதி,
ஐதுர்ஸ் மக்கான் வீதி, வடிகால் மதகுகள் திருத்தம் என்பன 15 இலட்சம் ரூபா
செலவிலும், மாவடிவீதி, கமால் வீதி, வைரவர் கோயில், கற்குளம் வீதி என்பன 12
அரை இலட்சம் ரூபா செலவிலும் பாரதி வீதி அதன் உப ஒழுங்கைகள், ஸ்ரான்லி
ஒழுங்கை, பேரின்பநாயகம் வீதி என்பன 10 இலட்சம் ரூபா செலவிலும்
திருத்தப்படவுள்ளன.
யாழ். பிரதி மேயராக சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
யாழ்முஸ்லிம் மண் வலைத்தளம் சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது:+ யாழ். பிரதி மேயராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.இவர் விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.யாழ். மாநகர சபை தேர்தலையடுத்து அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்த மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமையவே சட்டத்தரணி ரமீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Thursday, December 29, 2011
வீடுகளில் ஆண்டுகள்தான் படுத்துள்ளது வீடியோவுடன்
Wednesday, December 28, 2011
புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்துவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்தனர்
விடுதலைப் புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் அதிகமாக வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் விரட்டியடிக்ககப்பட்ட அவர்களுக்கு அவர்களின் பாரம்பரியமாக வாழ்விடம் அவர்களிடம் திருப்பி கொடுக்கப்படவேண்டும். மேற்குலகம் என்னைத் தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது.
Tuesday, December 27, 2011
பசுமையான பழைய நினைவுகளை தூண்டும் படம்
இது 'யாழ்முஸ்லிம்மண்ணின்' செய்தி: உங்களிடம் உள்ள பசுமையான பழைய
நினைவுகளை கிழரும் இந்தபடம் . வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தாகி விட்ட பிறகு
அதைப் பற்றித் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பதை பசுமையான பழைய
நினைவுகளை கிழரும் என்போம். 25 வருஷத்துக்கு முன் பார்த்த ஒரு நகரம், அதன்
பாடசாலை ,அதன் அதிபர் ,சக மாணவர்கள் எத்தனை இன்பமான நினைவுக் கிழறல்.
எம்மில் சிலர் இரண்டு ஆண்டுக்கு முந்தி செய்த கல்யாணம் , போன வாரம்
சாப்பிட்ட பால் சூரா, நேற்று பார்த்த படம் இவைகளையெல்லாம் நினைத்துப்
பார்த்து ஆனந்தப் படுவது உண்டு .
ஐதுரூஸ் மகான் பள்ளி இன்னும் இடிந்தே கிடக்கின்றது !!!
இது
'யாழ்முஸ்லிம் -மண்ணின் செய்தி: யாழ்பாண பள்ளிவாசல்களில் பெரும்பாலான
பள்ளிகள் அல்லாஹ்வின் உதவியால் பலரின் முயற்சியால் மீண்டும் ஓர் அளவு இயங்க
தொடங்கிவிட்டது. பாங்கு சொன்னால் பள்ளிக்கு வருவதற்கு நமவர்கள்
இல்லாதபோதும் கட்டிடம் மறுபடியும் எழுத்து நிற்கின்றது மாஷா அல்லாஹ்
மகிழ்ச்சியான விடயம் .ஆனால் ஐதுரூஸ் மகான் பள்ளியை அப்படியே இடித்து
போய் கிடக்கிறது ஐதுரூஸ் மகான் வீதியில் உள்ளவர்கள் எவரும் தங்களின்
காணிகளை விற்கவில்லை.
கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேச முஸ்லிம் காணிகள் தொடர்பில் கூட்டம்
இது யாழ் முஸ்லிம் மண்ணின் செய்தி: யாழ்ப்பாண
முஸ்லிம்களுக்கு சொந்தமான கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேசத்தில் 750
ஏக்கர் தொடக்கம் 1000 ஏக்கர் வரையான காணிகளை மீள பெற்று கொள்வது தொடர்பாக
அந்த பிரதேச காணிகளின் சொந்தகாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள்
பெற்றுக்கொள்ள தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கும்
நோக்கியில் ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று புத்தளத்தில் புத்தளம்
தில்லையடியில்இடம்பெற்றுள்ளது .
Monday, December 26, 2011
யாழ்.களச் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்த சில செல்வந்தர்கள் உலமாக்கள் கல்விமான்கள் என்போர் யாழில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள மக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். பல்வேறு இயக்க வேறுபாடுகள் இட்டுக்கட்டுகள் ஒற்றுமையின்மை வாலிபர்கள் தூரநோக்கின்றி செயற்படும் தன்மை என்பன இதற்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
ஒஸ்மானியாக் கல்லூரியின் தற்போதைய அதிபரை மக்களும் மாணவர்களும் அதிகம் நேசிக்கின்றனர். க.பொ.த. சாதாரணதரத்தில் சித்தியெய்தியவர்கள் க.பொ.த. உயர்தரத்தை ஒஸ்மானியாவிலேயே தொடர ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதனை நிவர்த்தி செய்வதை விட்டு விட்டு அதிபரை மாற்ற சில அமைப்புக்கள் முயற்சி செய்வதாக தெரிகின்றது.
இஸ்ரேலுடனான உடன்படிக்கைகளை நாம் மதித்து நடப்போம் - அந்நூர் கட்சியின் பேச்சாளர்
இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள சமாதான உடன்படிக்கையை தமது கட்சி மதித்து நடக்கும் என எகிப்தின் ஸலபி கட்சியான அந்நூர் கட்சியின் பேச்சாளர் யுஸ்ரி ஹம்மாத் இஸ்ரேலிய இராணுவ வானொலி சேவைக்குத் தெரிவித்துள்ளார். "உடன்படிக்கைகளுடன் நாம் முரன்படமாட்டோம் மாற்றமாக முன்னைய அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளை மதித்து நடப்போம்" என எகிப்திலிருந்து இஸ்ரேலின் இராணுவ வானொலிச் சேவைக்கு தொலைபேசியுடாக வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நிகாப் அணிந்ததற்காக சிறைக்கு சென்ற முதல் பெண்மணி
முதன் முறையாக நிகாப் அணிந்ததற்காக பிரான்சில் 32 வயது முஸ்லிம் தாயார் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹிந்த் அஹ்மாஸ் என்னும் அவர் கடந்த ஏப்ரல் மாதம் பாரிஸில் உள்ள எலிசீ அரண்மனைக்கு அருகில் பிரான்சில் தடை செய்யப்பட்ட நிகாபை அணிந்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் நாள் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. இதனை எதிர்த்து அவர் மனித உரிமை நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)