Saturday, September 1, 2012

20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தி

அ.செய்யது அலீ
1966, ஆகஸ்ட்-29, 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தியாகவும், அறிவுஜீவியாகவும் திகழ்ந்த செய்யத் குதுப், எகிப்திய அதிபர் ஜமால் அப்துல் நாஸரால் சிறைச்சாலையில் தூக்கிலடப்பட்ட கறுப்பு நாள். எழுத்தாளர், சிந்தனையாளர், இலக்கியவாதி, நூலாசிரியர், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவுகளஞ்சியம் இவை எல்லாவற்றையும் விட ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற பிரபல திருக்குர்ஆன் விரிவுரை நூலின் ஆசிரியர் என்று உலகம் அறிந்த அங்கீகரித்த செய்யத் குதுப் தூக்கிலிடப்பட்டு நான்கரை தசாப்தங்கள் கழிந்த பிறகும் அந்த அறிவு ஜீவியின்

Tuesday, February 28, 2012

யாழ் சோனவனின் புத்தி !!!!!

யாழவன் :யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியானின் முயற்சியால் யாழ் சோனக தெருவின் பல வீதிகள் காபர்ட் போடப்பட்டு , வீதிகளுக்கு பிரகாசமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மௌலவி சுபியானின் பல மாதங்களாக மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டுவருகிறது அதேவேளை இதை குழப்பவும் சில யாழ் மாநகர சபை உறுப்பினர் செயல்படுவதாகவும் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார் .

Sunday, February 26, 2012

யாழ் சோனகதெருவை நாசம் செய்த துரோகிகள் யார்?

ஒரு தமிழ் சினிமா.சிடிசன்  என்று ஞாபகம். “அத்திப்பட்டி” என்ற கிராமமே சில நயவஞ்சக சமூக விரோதிகளால் அடியோடு அழிக்கப்படுகிறது. அதில் தப்பிய நாயகன் இவர்களை பிடித்து சட்டத்தின் முன்பு ஒப்படைத்து நீதிபதி அனுமதியுடன் இவர்களிற்கான தண்டைனையையும் கூறுகிறான். அந்த தண்டனை இது தான். “நம் சமூகத்தை அழித்த இவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளக் கூடாது. பெண்கொடுத்தல், பெண் எடுத்தல், மரணத்தில் கலந்து கொள்ளல், வர்த்தகம் செய்தல் என அனைத்து விதமான சமூக தொடர்புகளையும் அறுத்து இவர்களை தனிமைப்படுத்துவது தான் அந்த தண்டனை”.

மீளமைக்கப்பட்டு வரும் யாழ் சின்னப்பள்ளிவாசல்

முஹம்மத் ஜான்ஸின் 
யாழ்ப்பாணம் சோனகதெருவில் அமைந்திருக்கும் சின்னப்பள்ளிவாசல் தற்போது மீளமைக்கப்பட்டு வருகின்றது.  1890களில் நல்லூரில் வாழ்ந்த இறுதி முஸ்லிம் குடும்பங்கள் சோனகதெருவில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதைப் பார்த்து அங்கு குடியேற விரும்பி குளத்தடி பிரதேசத்திலிருந்த காணிகளை வாங்கி அங்கு குடிசைகளை அமைத்துக் குடியேறினர். தமது தொழுகைக்காக நீண்ட தூரம் நடக்கவேண்டியிருந்ததால் தமது குடியிருப்புகளுக்கு அண்மையிலேயே பள்ளிவாசல் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டது தான் இந்த சின்னப்பள்ளிவாசலாகும்.

Monday, February 13, 2012

யாழ் தமிழர்களிற்கு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பகிரங்க வேண்டுகோள் !!

அன்பார்ந்த யாழ் குடா தமிழ் மக்களே. இது உங்களிற்கான பதிவு. இனவாதம், தமிழ் குறுந்தேசியவாதம், சாதித்துவம், ஆயுத அதிகாரம் போன்ற பேய்களை விட்டு விலகிய நிலையில் இதை கொஞ்சம் வாசியுங்கள்... தமிழ் மக்கள். நல்ல கலாச்சாரங்களிற்கு சொந்தக்காரர்கள். நல்ல கல்விக்கும் சொந்தக்காரர்கள். சிறந்த முயற்சியாளர்கள். கடின உழைப்பாளிகள். இப்படி எவ்வளவோ சொல்லலாம். தடம் புரண்ட போராட்டம் இது எல்லாவற்றையுமே அள்ளி சென்றுவிட்டது. உங்கள் போராட்டம் எம்மை அள்ளி சென்றது போல. அள்ளிச் சென்று புத்தள உப்பளங்களில் துப்பியது போல..

புலம்பெயர் தேசங்களில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களே ! உங்களுடன் ஒரு நிமிடம் சோனக தெரு பேசுகிறது..

யாழ் முஸ்லிம் பேஸ்: நான் சோனக தெருவின் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். மீலாத் விழாவின் கலகலப்புக்கள் அற்ற சோனக தெரு. அங்காங்கே சில குந்துகளில் ஜங்கில் புக் மௌக்லியை நினைவு படுத்தும் கோலங்களில் சிறுவர்கள். அவர்களைப் போலவே இன்னும் சில குந்துகளில் பெரிசுகள். ஒரு சில நாய்கள் (இவை சோனக தெருவில் தமிழர்கள் வாங்கிய வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள். அதாவது அந்த மண்ணிற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை அவற்றிற்கும் உண்டு) அவர்கள் பேசும் அரசியலை ஆவலோடு அன்னாந்து பார்க்கின்றன..

Wednesday, February 8, 2012

யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் 2012- படங்கள்

30 படங்கள் உங்களுக்காக: இஸ்லாத்தின் பார்வையில் தவறான களியாட்டங்கள் இடம்பெறவில்லை ஆனாலும் சில சகிக்க முடியாத சம்பவங்களும் இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் என்று கருதும் சில சம்பவங்களும் இடம்பெற்றது மொத்தமாக பார்க்கும் போதும் தேவையான ஒன்றாகவே தெரிகிறது , யாழ்பாணம் நிகழ்சிகளுக்கு வராதவர்களும் கூட வர தவறி விட்டோமே என்று யோசிக்கவைத்துள்ளது எல்லோர் கண்களிலும் “பழைய சோனக தெருவை” காணும் அவா. இருந்தது ஆனால் சில விடயங்கள் தவிர்க்க பட்டிருந்தால் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக அனைவரின் வரவேற்பையும் பெற்றிருக்கும் யாழ் முஸ்லிம்கள்.

யாழ் சோனகதெரு 2012 - உணர்வுகளின் கண்காட்சி

   “வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி காண்பதில்லை.
(சந்திரபாபுவின் பாடல் வரிகள்)
அபூ மஸ்லமா: யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு இனிதே நிறைவு பெற்ற பின்பு நாம் யாழ்ப்பாண முஸ்லிம்களிற்கு சில விடயங்களை ஞாபகபடுத்த விரும்புகிறோம்.... எம் அன்பிற்குரிய சகோதரர்களே, சகோதரிகளே...... நாம் முஸ்லிம்களின் ஒன்று கூடலை எதிர்க்கும் மறைநிலை சிந்தனையாளர்கள் (நெகடீவ் திங்கர்ஸ்) அல்ல.

யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல்

யாழ்பாடி யூஸுப்: இடம்பெயர்ந்து பல்வேறு ஊர்களிலும் நாடுகளிலும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான ஒன்று யாழ்ப்பாணம் சோனகரிஸ்தானில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியை சிறுசிறு தலையங்கங்கள் மூலமாக விரிவாக விளக்கலாம் என்று கருதி அவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.

யாழ் முஸ்லிம் - சென்நீக்கிலஸ் சமர்க்களத்தில்

முஹம்மத் ஜான்சின்: கடந்த 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை யாழ்;ப்பாணத்தில் இடம்பெற்ற ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயாந்த ஏராளமான முஸ்லிம்கள் வருகை தந்திருந்தார்கள். இந்த ஒன்று கூடல் நிகழ்வுகளில் ஒன்றாக உதைப்பந்தாட்டப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விளையாடிய யாழ் முஸ்லிம் உதைப்பந்தாட்ட அணி அந்த ஆண்டில் மட்டும் பல்வேறு வெற்றிக் கிண்ணங்களை யாழ்ப்பாணத்தில் சுவிகரித்திருந்தது. யாழ் உதைப்பந்தாட்ட லீக் கிண்ணம், லீக் தலைவர் கிண்ணம், யாழ் மாவட்ட சம்பியன் கிண்ணம்,

Tuesday, February 7, 2012

“அடி ராக்கம்மா கையதட்டு” - மாபெரும் யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல்

அபூ மஸ்லமா: இஸ்லாத்தின் பார்வையில் களியாட்டங்கள் பற்றி நாம் எவ்வளவோ எடுத்து சொன்னோம். யாருக்கும் புரியவில்லை. அல்லது புரிந்த போதும் கூட தங்கள் உள்ளத்தை கட்டுப்படுத்த முடியாத அவா. எல்லோர் கண்களிலும் “பழைய சோனக தெருவை” காணும் அவா. கனா காணும் கண்களிற்கு சொந்தக்காரர்கள் யாழ் முஸ்லிம்கள். 20 வருடம் அடக்கி வைத்த ஆசைகளை இரண்டு நாட்களில் அடைய துடிக்கும் அவர்கள் வேகம் எமக்கு புரியாமலில்லை.

Thursday, February 2, 2012

ஏன் இந்த இரட்டை வேடம்? ஏன் இந்த நயவஞ்சகத்தனம்?

குறித்த திகதியின் BBC தமிழோசையை இணையத்தின் மூலம் கேட்க முடியும். செய்தியறிக்கையில் இடம் பெற்ற ஒரு செய்தியில் பாவிக்கப் பட்ட வார்த்தைகள் தொடர்பில் நான் BBC தமிழோசைக்கு அனுப்பி வைத்துள்ள எதிர்ப்பு கீழே இணைக்கப் பட்டுள்ளது. மேற்படி விடயம் குறித்து உங்கள் தளங்களில் செய்திகளை வெளியிடும்படியும், எதிர்ப்பை வெளியிடும் படியும் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

வலைத்தள தெருக் கோழி சண்டை வேண்டாம்

''சின்னபள்ளிவாயல் நிகழ்வுகளும் - ஜான்ஸின் எனும் மனிதனின் குழப்பங்களும்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஒரு யாழ்ப்பாண முஸ்லிம் வலைத்தளம் பதிவு செய்திருந்தது , அதேபோன்று அதற்கு எதிராகவும் , புதிராகவும் எமது யாழ்ப்பாண முஸ்லிம் நபர்கள் சிலரினால் நடத்தப்படும் வலைதலங்களில் செய்திகள் நாற்றம் எடுக்கும் அளவுக்கு வெளியாகின்றன அவை மிகவும் கவலையான விடயம் அதற்கு லண்டனில் வாழும் ஒரு யாழவன் -அலி ரிஷான்- தனது ''முகப்பு நூலில்'' Face book இந்த தெருச் சண்டை தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார் அந்த கருத்துக்கள் மிகவும் சிறந்த கருத்துக்களாக எமக்கு பட்டதால் யாழ் முஸ்லிம் மண் அந்த அவரின் கருத்தை இங்கு தருகிறது வாசித்த பின்னர் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் .

யாழ் முஸ்லிம் மண்ணை காப்பாற்றுங்கள் - முஸ்லிம் புலம்பெயர் உறவுகளிற்கு ஒரு வேண்டுதல்!

 ABU Maslama
பலஸ்தீனில் அன்று யூதர்களிற்கு காணிகளையும், விவசாய நிலங்களையும் விற்பதனால் ஏற்படும் தீங்குகளை உணர்ந்த உலமாக்கல் லெபனானின் பெய்ரூட்டில் ஒன்று கூடி ஒரு பத்வா வெளியிட்டனர். “இன்றிலிருந்து பலஸ்தீன மண்ணை விற்பது ஹராம்” என்பதே அந்த பத்வா. தமிழர்கள் சாதிக்காக போராடினார்கள். விடுதலைக்காக போராடினார்கள். இரண்டுமே கிடைத்தபாடில்லை. இயக்கங்கள் விடுதலைக்காக போராடின. தலைமைத்துவத்திற்காக போராடின. இரண்டுமே கிடைக்கவில்லை. இப்போது தங்களை தக்க வைத்துகொள்வதற்காக போராட வேண்டிய நிலமை. போராடியதன் விளைவு படலைக்குள் இராணுவம் வந்து நிற்கும் நிலை.

Tuesday, January 31, 2012

யாழ் ஐதுறூஸ் மகாம் மஸ்ஜித் திருத்தப்படுமா?

எம்.எஸ்.அப்துல்லாஹ்: யாழ்ப்பாணத்தின் பள்ளிவாசல்கள் படிப்படியாக மீளமைக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயமே. தற்போது சின்னப்பள்ளிவாசல் மீளமைக்கப்பட்டு வருகின்றது. பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் பள்ளிவாசலை மீளக்கட்ட அப்பள்ளிவாசலின் மஹல்லாவாசிகளைக் கொண்ட மீளமைப்புக் குழுவின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்குறியது. அக்குழுவின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் திருத்தப்படாமல் இருக்கும் ஐதுறூஸ் மகாம் மஹல்லாவாசிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

Monday, January 30, 2012

யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் - ஐயங்களுக்கு தெளிவு

அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி)
யாழ்ப்பாணம் முஸ்லிம் ஒன்றுகூடல் இம்முறை 2012 பெப்ரவரி 4,5,6,7ம் திகதிகளில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தை மையப்படுத்தி யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வையொட்டி பல்வேறு விமர்சனங்களும் கருத்தாடல்களும் பரவலாக எம்மவர் மத்தியில் உலா வருகின்றது, ஒரு சிலர் இதனை எம்மவர்கள் வருடா வருடம் கொண்டாடும் “கொண்டாட்டத்துடன்” ஒப்பீடு செய்கின்றார்கள், இன்னும் சிலர் “வெள்ளைக்கடற்கரை கொடியேற்றம்” என அடையளம் செய்கின்றார்கள்,

Sunday, January 29, 2012

டாக்டர் அப்துல் கலாமை சந்தித்த யாழ் முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகள்.

யாழ் முற்றவெளிக்கு முன்பாக உள்ள கேட்போர் கூடத்தில் விஷேட உரை நிகழ்த்திய இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமை யாழ் முஸ்லிம்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று மதியம் சந்தித்தனர். ஜனாப் எம்.ஏ.சி.முபீன்[Trustee -Pudupalle of Jaffna], Mr.தாஹிர் (சியானாஸ்), Mr.அஸ்மின் (நளீமி) ஆகியோர் அப்துல் கலாமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Friday, January 20, 2012

யாழ். முஸ்லிம்களுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் உதவி


யாழ்ப்பாணம் புதிய முஸ்லிம் பிரதேசம் என்று அழைக்கப்படும் பொம்மை வெளிப்பகுதிகளில் முஸ்லிம்கள் புலிகளினால் வெளிவேற்றபட்ட பின்னர் அழிந்து போன , சேதமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகளை புனர்நிர் மாணம் செய்வதற்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் முன்வந்துள்ளது. யாழ்.மாநகரசபை உறுப்பினர் மௌலவி பி.எஸ்.சுபியான் மற்றும் பலரின் முயற்சியால் அகில இலங்கை முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் கேகாலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீமிடம் விடுத்த வேண்டு கோளையடுத்து இதற்கான நிதியுதவி வழங்கப்பட் டுள்ளது.

யாழ்பாணத்திற்கு விசேட வெளிநாட்டு , உள்நாட்டு ஜமாஆத்துக்கள்

யாழ்பாணத்திற்கு விசேட வெளிநாட்டு , உள்நாட்டு ஜமாஆத்துக்களை யாழ்பாணத்தில் அதிகமாக அனுப்ப கொழும்பு தப்லீக் ஜமாஅத் தீர்மானித்துள்ளதாக யாழ் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழ்பாணத்தில் தற்போது யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஏனைய ஊர் முஸ்லிம்களும் குடியேறியும் , வியாபார நோக்கம் கருதியும் யாழ்பாணத்தில் அதிகம் நடமாடும் நிலையில் அவர்களின் இபாதத் விடயங்களை கவனிக்கவும் , ஊக்குவிக்கவும் மர்கசில் இருந்து விசேட ஜமாஅத்துகளை அனுப்ப மசூரா செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Thursday, January 19, 2012

யாழ் மண்ணை நோக்கிய ஆய்வு சுற்றுலா

புத்தளம் மற்றும் கொழும்பு பகுதியில் வசிக்கும் யாழ்பாணத்தை சொந்த மண்ணாக கொண்டவர்கள் பலர் இணைத்து யாழ் மண்ணை நோக்கிய ஆய்வு சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களின் சமூக ஆர்வலர்களையும் இணைந்துகொண்டு ஆய்வு சுற்றுலாவை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இந்த ஆய்வு சுற்றுலாவின் போது யாழ்பாணத்தில் உள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்கள் , பொது கட்டடங்கள் என்பன தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் அவற்றை தொழில்சார் ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான தகவல்களை தொழில்சார் ரீதியில் சேகரிக்க ஏற்பாடுகளை செய்யவுள்ளனர் என்று அதன் ஏற்பாடு குழுவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மீலாதுன் நபி விழா - எதை நோக்கிய பயணம்?

ABU SAYYAF: 
வர்ண ஒளி வீசும் ட்யூப் லைட்கள். தந்தி போஸ்ட்களில் கட்டப்பட்ட ஈச்சை மரங்கள். சடசடத்து சலசலக்கும் பச்சை வெள்ளை முக்கோண பொலித்தீன் கொடிகள். ஒயாமல் ஒலிக்கும் ஈ.எம். ஹனிபாவின் கானா பாடல்கள். சந்திகளில் அமைக்கப்படும் பெரும் தோரண முகப்புக்கள். அதில் பற்றி பற்றி அணையும் கலர் மின்குமிழ்கள், அதற்கு மின்சாரம் பாய்ச்சும் பயங்கர என்ஜின். பலுன் வியாபாரி, நைஸ் மாமா, காத்தான்குடி துப்பு முட்டாஸ். மத்தாப்பு. சக்கரவாணம். கச்சுக்காக்காவின் கிடாயின் மொச்ச வாசம். தேங்காய் சோறு. திண்ணை குந்துகளில் ஆண்கள்.

Sunday, January 15, 2012

வெடி விபத்தில் யாழ் முஹீதீன் மௌலவி படுகாயம்


இது 'யாழ்முஸ்லிம்மண்' வலைத்தளச் செய்தி: யாழ்பாணம் முஹீதீன் மௌலவி வீட்டில் ஏற்பட்ட வெடிப்பு வம்பவம் ஒன்றில் அவர் படுகாயமடிதுள்ளார் அவரின் உறவினரான 19 வயது இளைஞ்சன் வபாத்தாகியுள்ளார். மேலும் குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது முஹீதீன் மௌலவி மகனும் மற்றும்மொருவரும் படுகாயமடிதுள்ளார். யாழ்பாணம் ஐதுரூஸ் மகான் பள்ளியின் முஅத்தீன் ''மம்மது காக்கா'' ( மலையாலத்து மம்மது) அவர்களின் முத்த மகனான முஹீதீன் மௌலவி புலிகளால் யாழ் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தல் நிலவிய 2002 ஆண்டு காலத்தில் இருந்து பல வருடங்கள் யாழ்ப்பாண பள்ளிகளில் தொழுகையும் ஜும்ஆ வும் நடத்தி வந்தவராவார்

Friday, January 13, 2012

யாழ் சின்னப்பள்ளிவாசலை திருத்துவதற்கான அனுமதி


யாழ் சின்னப்பள்ளிவாசலை திருத்துவதற்கான அனுமதிக் கடிதத்தை பெறுவதற்கான முயற்சிகள்  கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு தற்போது அதன் நிர்வாக சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வக்பு சபையின் 2012.01.11 திகதியிடப்பட்டு பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம.எஸ்.ஜினூஸுக்கு இந்த அனுமதிக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 10, 2012

இந்த செய்தியை வாசியுங்கள் என்ன சொல்லுகிறது ???


யாழ். மானிப்பாய் வைத்திஸ்வரா சந்தியிலுள்ள தனியார் விடுதி கிணற்றில் இருந்து சடலம் குடும்பஸ்தர் ஒருவரது சடலத்தை இன்று காலை யாழ்.பொலிஸார் மீட்டுள்ளனர். மானிப்பாயைச் சேர்ந்த எஸ். யூட்டன் வயது 30 என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.

Monday, January 9, 2012

யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாக சபை

தகவல்: எம்.எஸ்.எம்.ஜான்ஸின்: யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான தெரிவுகள் 2012 ஆம் ஆண்டு ஜனவரி 7 சனிக்கிழமை இடம்பெற்றது. நிர்வாகசபைக் கூட்டம் யாழ் சின்னப்பள்ளியில் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றது. கூட்டத்தை சிறந்த முறையில் நடத்த யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள சில நிர்வாக சபை உறுப்பினர்கள் துணிவுடன் முன்வந்து ஒத்துழைப்பு வழங்கினர்.

Sunday, January 8, 2012

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பில் நிர்மலா ராஜசிங்கம்

ஏ.அப்துல்லாஹ்: சுமார் 70 தமிழ் புத்திஜீவிகள் கையொப்பமிட்டு தமது கோரிக்கைகளில் ஒன்றாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். இந்த அறிக்கையில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசும்போது

Saturday, January 7, 2012

மற்றுமொரு யாழவனின் வீடியோ பாருங்கள்

புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்துவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகனான முஸ்லிம்கள் வாழ்ந்தனர் என்று ஜனாதிபதி கூறியுள்ளார் இன்றைக்கு 300 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரம் முஸ்லிம் வர்த்தகர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது என்பது யாழ் பற்றிய வரலாறு ஆனால் இன்று நிலைமை படு பயங்கரமாக உள்ளது. யாழ்ப்பாண சோனகர் தெருவுக்குள் கிறிஸ்தவ தேவாலயம் எழுப்புவதற்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றது

Wednesday, January 4, 2012

முஸ்லிம் வர்த்தகரின் இரும்புக் கடத்தலுக்கு இராணுவம் உதவி ???

இது தொடர்பான யாழ் கள விபரங்களை ''யாழ்முஸ்லிம் -மண்'' பின்னர் வழங்கும் அதற்கு முன்னர் உதயன் பத்திரிகை ''முஸ்லிம் வர்த்தகரின் இரும்புக் கடத்தலுக்கு இராணுவம் உதவி! ''தெரிவித்துள்ள செய்தியை தருகிறோம்: காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலுள்ள பல லட்சம் ரூபா பெறுமதியான இரும்புகளை வெட்டி எடுத்துத் தென்னிலங்கைக்குக் கடத்த எடுத்த முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.தகவல் ஒன்றையடுத்து காங்கேசன்துறையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரும்பு ஏற்றப்பட்ட நிலையில் லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Tuesday, January 3, 2012

யாழ் ஓஸ்மானியா கல்லூரிக்கு உதவி

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் லிட்றில் எய்ட் நிறுவனம் புக் அப்றோட் –அமைப்பின் உதவியுடன் நூலகமொன்றை திறந்து வைத்துள்ளது. அண்மையில் இந்நூலகத்தை லிற்றில் எய்ட் அமைப்பின் திட்ட இணைப்பாளர் ரி கொன்ஸ்ரன்ரைன் திறந்து வைத்தார்.நூலக திறப்பு நிகழ்வு அக்கல்லூரியின் அதிபர் மெளலவி முபாரக் தலைமையில் இடம்பெற்றது. யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தற்சமயம் 390 மாணவர்கள் கல்வி பயில்வதாகக் குறிப்பிட்ட அதிபர் முபாரக்; மாணவர்களின் எண்ணிக்கை 1000 மாக உயரும் எனவும் அவர்களுக்கு இந்நூலகம் மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Monday, January 2, 2012

யாழ்ப்பாண முஸ்லிம்கள் - துரத்தும் இனவாதம்

அபூ சையாப்
யாழ் மாநகர சபை. மேயர் அல்பிரட் துரையப்பாவால் இனவாதம் சுத்திகரிக்கப்பட்டு, மேயர் நாகராசாவால் அதே இனவாதம் மீண்டும் திறந்துவிடப்பட்டு, கொமிஷினர் சிவஞானத்தால் பராமரிக்கப்பட்ட சாக்கடை. இப்போது யாழ் முஸ்லிம்கள் பற்றிய சர்ச்சை. மாநகர சபை உறுப்பினர் விந்தன் கூறிய “யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் நாய்களை உள்ளே விட்டது தவறு” எனும் வார்த்தை சில வேளைகளில் சொல்லப்படாத வார்த்தைகளாக கூட இருக்கலாம். ஆனால் தமிழ் குறுந்தேசியவாதிகளின் உண்மை நிலைப்பாடு அது தான்.

Sunday, January 1, 2012

மீளக்குடியேறுவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு தடை: அமைச்சர் ரிசாத்

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து வரும் வடமாகாண முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு தடையாக இருப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.வடக்கு முஸ்லிம்கள் மீளக்குடியேற வேண்டுமென பேச்சளவில் கூறிவரும் கூட்டமைப்பு எம். பிக்களின் செயற்பாடுகள் அதற்கு முரணாக அமைந்துள்ளதாகவும் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல உள்ளதாகவும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

யாழ் மாநகர சபையில் என்ன நடைபெற்றது கூறுகிறார்கள் உறுப்பினர்கள்

M.ரிஸ்னி முஹம்மட்: யாழ் மாநகரசபையில் முஸ்லிம்களை ‘யார் இங்கு வரச் சொன்னது‘ என்றும் , ‘இந்த நாய்களை யார் விட்டது‘ என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது  லங்காமுஸ்லிம் இணையத்தளத்திற்கு இஷாக் என்ற செய்தியாளர் அது தொடர்பான  தகவல் ஒன்றையும் அனுப்பியிருந்தார் அதில் ”முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா இவ்வளவு துணிவு தந்தது? என்று தெரிவித்துள்ளார்.” என்று தெரிவித்திருந்தார்.